மீண்டும் இணையும் கீதா கோவிந்தம் கூட்டணி
எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பரசுராம், தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா இணைகிறார்
‘கீத கோவிந்தம்’ படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் பரசுராமுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒருமுறை இணைகிறார். இது குறித்தான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
பிளாக் பஸ்டர் வெற்றியான ‘கீத கோவிந்தம்’ படத்திற்கு பிறகு விஜய் மற்றும் பரசுராம் இரண்டாவது முறையாக இணைகின்றனர். இந்த புராஜெக்ட் புதிய மற்றும் தனித்துவமான கதையாக இருக்கும்.
ஸ்டார் தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இந்த புதிய படத்தைத் தயாரிக்க உள்ளனர். விஜய்யுடன் இணையும் இந்த படம் எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட இருக்கிறது.
நடிகர்கள், படக்குழுவினர் விவரங்கள் மற்றும் படம் குறித்தான அடுத்தடுத்த புரோமோஷனல் விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.