சீரியலில் களம் இறங்கும் SA சந்திரசேகர்!
தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனராகவும், நடிகராகவும் இயங்கி வரும் எஸ். ஏ. சந்திரசேகர் டிவி சீரியல் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். அதோடு ‘ராடான் டிவி மீண்டும் விஜய் டிவி உடன் கை கோர்க்க போகிறது. அதன் ஒரு பகுதியாக ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் கதையின் சீரியல் பதிப்பாக `கிழக்கு வாசல்’ – என்று ஒரு கதையாக தயாரித்து இருக்கிறார்கள்.
அந்தப் படத்தில் விசு நடித்த ரோலில் நடிக்க ஏகப்பட்ட சீனியர் நடிகர்களை தேடி, பின்னர் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரை நடிக்க வைக்க கமிட் செய்து இருக்கிறார்கள்.
இதோடு இந்த சீரியலில் நடிக்க மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. நடிகர்கள் தேர்வு முடிந்ததும் இம்மாத இறுதியில் படபிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலிருந்து அந்தப் புதிய சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.