ஏ ஆர் முருகதாஸூடன் சிவகார்த்திகேயன்!
’தீனா’, ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ ஆகியப் படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். கடைசியாக அவர் ரஜினிகாந்த் உடன் இணைந்த ‘தர்பார்’ படம் தோல்வியைத் தழுவியது.
அதன் பிறகு முருகதாஸ், நடிகர் விஜய்-ன் 65-வது படத்தை இயக்குகிறார் என்று கூறப்பட்டது. ஆனால், அது கைவிடப்பட்டது. இவரது கதையில் உருவாகி, திரிஷா நடிப்பில், சரவணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ராங்கி’ திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது. இந்த நிலையில், அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
’பிரின்ஸ்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’, ‘அயலான்’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இவர்கள் இருவரும் இணைந்து படம் செய்ய இருந்த நிலையில் தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று சினிமா வட்டாரத்தில் பேசி கொள்ளப்படுகிறது. இந்த படத்தை லைட் ஹவுஸ் மூவி தயாரிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது..
இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.