தனுஷ்-ன் 50 ஆவது படத்தை இயக்குவது யார்?
நடிகர் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது குறித்த முழுமையான அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த படத்தை தனுஷ் இயக்குவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக அறியப்படுகிறது.
தமிழ், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் தனுஷ். நடிப்பு மட்டுமல்லாது பாடல் எழுதுவது, திரைப்படம் இயக்குவது போன்ற பணிகளையும் மேற்கொண்டுள்ளார். தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது. அதற்கு முன்னர் ஆடுகளம் மற்றும் மாப்பிள்ளை போன்ற தனுஷ் படங்களை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்து இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தை தனுஷ்-யே இயக்குவரா இல்லை புதிய இயக்குனர் உள்ளே வருவாரா என்பதை வெகு விரைவில் அப்டேட் மூலம் அறிந்து கொள்ளலாம்.