கமல்ஹாசன் தலைமையில் அப்துல் ஹமீது புத்தகம் வெளியீடு
வானலையில் ஒரு வழிபோக்கன் என்ற தலைப்பில் சிலோன் வானொலியின் பி.எச்.அப்துல் ஹமீது எழுதிய புத்தகம் வெளியிடும் விழா சமீபத்தில் நடைபெற்றது.
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் பி.சுசீலா பெற்றுக்கொண்ட புத்தகத்தின் முதல் பிரதியை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். இரண்டாவது பிரதியை ராம்குமார் கணேசன் (சிவாஜி கணேசனின் மூத்த மகன்) பெற்றுக்கொண்டார். பிளாக்ஷீப் விக்னேஷ்காந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
கமல்ஹாசன் தனது உரையில், அப்துல் ஹமீதின் தூய்மை மற்றும் தமிழை உச்சரிப்பதில் முழுமை பெற்றிருப்பதைக் குறிப்பிட்டார். அப்துல் ஹமீது உடனான நீண்ட கால தொடர்பை அவர் நினைவு கூர்ந்தார். பி. சுசீலா பேசும் போது, ஒரு ஒலிபரப்பாளர் பலராலும் பாராட்டப்படுவது குறித்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
அப்துல் ஹமீதின் தமிழ் உச்சரிப்பின் ஆழத்தை பாராட்டிய அவர், தானும் ஒரு தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்ட போதிலும் , தமிழ்ப் பாடல்களை ஒழுங்காகவும், கச்சிதமாகவும் பாடியதாகக் குறிப்பிட்டார். அப்துல் ஹமீது தனது நன்றி உரையில், ஒலிபரப்பாளராகவும், நடிகராகவும் மற்றும் பிற அவதாரங்களாகவும் தனது பயணத்தை உணர்ச்சிகரமாக விவரித்தார். டி.எம்.சௌந்தர்ராஜன் மற்றும் பி.சுசீலாவின் பிசிறற்ற மற்றும் குறைபாடற்ற உச்சரிப்பு பற்றி குறிப்பிட்டார்! . தெனாலி படத்தின் போது கமல்ஹாசனுடனான தனது தொடர்பைப் பற்றி சிலாகித்தார், அதில் கமல் சிலோன் உச்சரிப்புடன் வசனம் பேசியதை உளமார பாராட்டினார்
நிகழ்வில் ஈடுபட்ட மற்ற அனைவருக்கும், அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் விளம்பரதாரர்கள் மற்றும் வெளியீட்டாளர்களுக்கு அவர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். சிவாஜி கணேசன், டி.எம். சௌந்தர்ராஜன், கே.பாலச்சந்தர், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாரதிராஜா, வைரமுத்து போன்ற மூத்த கலைஞர்கள் ஹமீது பற்றி பேசியது பற்றிய ஒலி/ ஒளி விளக்கக்காட்சி- நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம்