உலகம் சுற்றும் வாலிபன் அஜித்குமார்!!

உலகம் சுற்றும் வாலிபன் அஜித்குமார்!!

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

துணிவிற்கு பிறகு ஏ.கே. 62 என்று தற்காலிக பெயரிடப்பட்ட படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படபிடிப்பு ஜனவரியில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு துவங்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் குமார் தனது BMW மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டவர். ஐரோப்பிய நாடுகளில் சில நாட்களுக்கு முன் ஆர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித்குமார், துணிவு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் அஜித், இன்றுடன் இந்தியா முழுவதும் மேற்கொண்ட பைக் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் உலக பைக் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய சுற்றுப்பயணம் அமைந்துள்ளது என குறிப்பிட்டு, உலக பைக் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டம் நிறைவடைந்தது என்றும் அவரது நண்பர்கள் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *