நடிகர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் அவர்களின் இளையமகள் திருமணம்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சிவகுமார் தலைமையில், தயாரிப்பாளர் டாக்டர். ஜி. தனஞ்ஜெயன் அவர்களின் இளையமகள் ஹரிதாவின் திருமணம் ஆதர்ஷனுடன் மிகப்பெரிய விழாவாக டிசம்பர் 12, 2022 சென்னையில் நடைபெற்றது
டாக்டர். ஜி. தனஞ்ஜெயன் BOFTA ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனர், தமிழ் சினிமாவின் பிரபலமான பல திரைப்படங்களின் தயாரிப்பாளரும், தற்போது முன்னணி நடிகர் விஜய் ஆண்டனியுடன் (கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி) நான்கு படங்களை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக தயாரித்து வருகிறார். தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளராகவும் செயல்பட்டு வருகிறார். சினிமா குறித்த அவரது புத்தகம் மற்றும் எழுத்துக்காக இரண்டு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.
ஜி. தனஞ்ஜெயன் அவர்களது இரண்டு மகள்களும் உயர் படிப்பை (M.S. in Computers) USA-வில் முடித்துவிட்டு தற்போது முன்னணி நிறுவனங்களில் அங்கே வேலை பார்த்து வருகின்றனர். இரண்டு மகள்களின் திருமணமும் நவம்பர் மற்றும் டிசம்பர் 2022 என ஒரு மாத இடைவெளிக்குள்ளேயே குடும்பத்தால் திட்டமிடப்பட்டது. மூத்த மகள் ரேவதியின் திருமணம் நவம்பர் 20, 2022-ல் அபிஷேக் குமாருடன் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் திரைத்துறையைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
டிசம்பர் 12, 2022 அன்று இளையமகள் ஹரிதா- ஆதர்ஷன் நயினார் திருமணம் நடைபெற்றது. மூத்த நடிகரும், மிகச்சிறந்த பேச்சாளருமான சிவகுமார் தன் குடும்பத்துடன் நிகழ்வில் கலந்து கொண்டு, மணமகன் ஆதர்ஷனுக்கு தன் கையால் தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.
‘பத்மபூஷன்’ கமல்ஹாசன் அவர்களால் முக்கியமான கமிட்மெண்ட் காரணமாக இந்தத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் தன்னுடைய PRO மூலமாக மணமக்களுக்கும், கடந்த மாதம் திருமணம் நடந்த மூத்த மகள் ரேவதிக்கும் மதிப்புமிக்க பரிசை கொடுத்தார்.
பல திரையுலக பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்த திருமணத்திற்கு மேலும் பிரம்மாண்டம் சேர்த்தனர். அதில் சிலரின் பட்டியல்…
முன்னணித் தயாரிப்பாளர்கள்:
கலைப்புலி. S. தாணு, S.A. சந்திரசேகரன், T.G. தியாகராஜன், முரளி ராமநாராயணன், பிரமிட் நடராஜன், T. சிவா, K.E. ஞானவேல்ராஜா, S.R. பிரபு, PL தேனப்பன், K.S. ஸ்ரீனிவாசன், K.S. சிவராமன், A.L. அழகப்பன், லலித்குமார், சித்ரா லக்ஷ்மணன், JSK சதீஷ் குமார், கமல்போஹ்ரா, B. பிரதீப், ராஜ் நாராயண், P.G. முத்தையா, ‘Big Print’ கார்த்திகேயன், சமீர் பரத், அருண்மொழி மாணிக்கம் மற்றும் பலர்.
முன்னணி இயக்குநர்கள்:
K. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ஆர்.பார்த்திபன், சேரன், லிங்குசாமி, ஏ.எல். விஜய், எழில், சசி, திரு, பாண்டிராஜ், சிம்புதேவன், அறிவழகன், சி.எஸ். அமுதன், கருணாகரன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, பாலாஜி குமார், கிருஷ்ணா, கௌரவ் நாராயணன், ஆர்.கண்ணன், ஜெகன், ஹரிகுமார், ராஜ்தீப் மற்றும் பலர்.
முன்னணி நடிகர்கள்:
கௌதம் கார்த்திக், சிபி சத்யராஜ், ஜி.வி. பிரகாஷ்குமார், தியாகராஜன், பிரசாந்த், பஞ்சு சுப்பு, கவிதாலயா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, கிகி விஜய், ஜெகன், சித்தார்த்தா சங்கர், ஜெயபிரகாஷ் மற்றும் பலர்.
மற்ற பிரபலங்கள்:
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர்
‘திருப்பூர்’ சுப்ரமணியம், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, சினேகன், இசையமைப்பாளர் கிரீஷ் கோபாலகிருஷ்ணன், ‘குக்கு வித் கோமாளி’ டைட்டில் வின்னர் கார்த்திகா கனி, யூடியூபர் இட்ஸ் பிரஷாந்த், ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி, ‘சரிகம’ ஆனந்த் மற்றும் பலர்.
மேலும், ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பாடகர்கள் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த மாபெரும் விழாவில் கலந்து கொண்டனர்.
தனது இரண்டு மகள்களிம் திருமணத்தை அடுத்தடுத்து நடத்தி முடித்துள்ள மகிழ்ச்சியில் ஜி. தனஞ்ஜெயன் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ‘திரையுலக நண்பர்கள் மற்றும் என் நலன் விரும்பிகள் என திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இந்த நிகழ்வை பிரம்மாண்டமாகவும் மகிழ்ச்சியான நினைவாகவும் எங்கள் குடும்பத்திற்கு மாற்றிக் கொடுத்த திரு. சிவகுமார் அவர்களுக்கும் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இரண்டு மகள்களின் திருமணத்திற்கும் உங்களது நேரத்தை ஒதுக்கி வந்துள்ளீர்கள். இருபது வருடங்களுக்கும் மேலாக நான் இந்தத் திரையுலகில் இருப்பதற்கான மதிப்புமிக்க மகிழ்ச்சியான தருணமாக இதைப் பார்க்கிறேன். மேலும் என் மகள்களின் திருமணத்தை மக்களிடமும் கொண்டு சேர்த்த ஊடகத்துறை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி’ எனக் கூறியுள்ளார்.
D’One அணி, சுரேஷ் சந்திரா மற்றும் நாசர் தலைமையில் பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் ஒருங்கிணைந்தனர்.