“பாபா பிளாக் ஷீப்” படத்தின் படப்படிப்பு இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது.

ரோமியோ பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் பிளாக் ஷீப் ஊடக குழுவினரும் இணைந்து ஒரு புதிய படத்தை கருவாக்கி உருவாக்க இருக்கிறார்கள். யூடியூப் சேனலாகத் தொடங்கி இன்று தங்களுக்கென ஒரு சேட்டிலைட் டிவி, ஓடிடி என வளர்ந்து நிற்கும் பிளாக் ஷீப் இளைஞர் பட்டாளத்தின் மற்றுமொரு மைல் கல்லாய் பள்ளிக்கூட பருவத்தை மையமாக வைத்த புத்தம் புதிய திரைப்படத்தை எழுதியிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பல வெற்றிப்படங்களில் பங்களிப்பு செய்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் , பிளாக்ஷிப்பின் இந்த கனவுத் திரைப்படத்தை தயாரிக்கிறார். பிரபல டிஜிட்டல் , தொலைக்காட்சி மற்றும் மேடைப்பேச்சு நட்சத்திரமான தமிழ்ப்பேச்சு ராஜ்மோகன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். இந்த படத்திற்கு “பாபா பிளாக் ஷீப்” என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள “பாபா பிளாக் ஷீப்” படத்தில் RJ விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
கலை – மாதவன்
படத்தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி
சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் சாம்
நடனம் – அசார்
பாடல்கள் – யுகபாரதி, A.PA.ராஜா, வைசாக்
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – கோபி பிரசன்னா
புரொடக்ஷன் மேனேஜர் – மலர்கண்ணன்
மக்கள் தொடர்பு – சதீஷ் – சிவா (AIM)
2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.