அந்த விஜய் படம் வேண்டவே வேண்டாம்!
கலைப்புலி தாணு தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்ததெறி படம் வசூல் ரீதியாக மிகபெரிய வெற்றி அடைந்தது. இதில் நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜயின் மகளாக நடித்து இருந்தார். அதோடு சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் உட்பட பலர் நடித்து இருந்தனர்.
தெறி படத்தை படக்குழு தெலுங்கிலும் டப் செய்து வெளியிட்டார்கள். இத தொலைகாட்சி சேனலிலும் பல முறை ஒளிபரப்பி இருக்கிறார்கள். அதனால் தெலுங்கு ரசிகர்கள் எல்லோருக்கும் தெரிந்த கதை தான் தெறி.
ஆனால் தற்போது நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தெறி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஹரிஷ் ஷங்கர் அந்த படத்தை இயக்குகிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இது பவன் கல்யாண் – ஹரிஷ் ஷங்கர் கூட்டணியில் அறிவிக்கபட்ட PSPK28 திரைப்படம் தான் என்று கூறப்படுகிறது
இப்படி புது கதையில் நடிக்காமல் பவன் கல்யாண் ரீமேக் படத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் தெறி ரீமேக் செய்ய கூடாது என ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அதிலும் ஒரு ரசிகர் தெறி ரீமேக் செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என கடிதம் எழுதி இருக்கிறார். அது தெறி ரீமேக் படம் தான் என படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவிக்கலை என்றாலும், ரசிகர்கள் தற்போது செய்து வரும் விஷயம் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது