இந்த பாடலின் காபி தான் ” தீ தளபதி”

இந்த பாடலின் காபி தான் ” தீ தளபதி”

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் படத்தின் பிரமோஷன் பணிகள் படுவேகமாக நடந்து வருறது. இந்நிலையில், ஏற்கனவே வாரிசு படத்தின் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடல் 75 மில்லியன் ரசிகர்களால் youtube தளத்தில் பார்த்து ரசிக்கப்பட்டு சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து, இரண்டாவது சிங்கிள் பாடலான “தீ தளபதி” பாடல் டிசம்பர் நான்காம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. அதில் ரசிகர்களுக்கு இருந்த பெரும் ஆச்சர்யம் என்னவென்றால் பாடலை சிலம்பரசன் பாடுகிறார் என்ற செய்தி தான்.

அந்த வகையில் நேற்று இந்த பாடல் வெளியாகி தளபதி ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுவருகிறது. சிம்பு பாடியுள்ள இந்த பாடலுக்கு, பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகள் எழுதி உள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல், தற்போது காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது.

தமன் இசையில் ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் பாடலான, ரஞ்சிதமே பாடலுக்கும் இதே போல் ஏகப்பட்ட கருத்துகள் வலம் வந்த நிலையில், இரண்டாவது பாடலும் ஏகப்பட்ட பாடல்களில் இருந்து காப்பியடித்து தான் என நெட்டிசன்கள் பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்

May be an image of 2 people, people standing, fire and text

குறிப்பாக அனிருத் இசையில் வெளியான நானும் ரௌடி தான் படத்தில் இடம்பெற்ற ” வரவா வரவா” என்ற பாடலில் இருந்து தான் ” தீ தளபதி ” உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது. எனினும் இது போன்ற ட்ரோல்களை தாண்டி தற்போது தீ தளபதி பாடல் வெறித்தனமாக தளபதி ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *