இத்தனை பேர் ஆசைப்பட்ட கதையா இது?
நாவலையும், சிறுகதையும் திரைப்படமாக மாற்றுவதில் ஒரு சில இயக்குனர்களே ஆர்வமாய் இருப்பார்கள். அதில் முக்கியமானவர்கள் மணிரத்னம், பாலா, வெற்றிமாறன். இதில் இயக்குனர் மணிரத்னம் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் சரித்திர நாவலை திரைப்படமாக்கி அதில் வெற்றியும் கண்டார்.
இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கைதிகள் என்ற கதை திரைப்படமாக எடுக்க இந்த மூன்று இயக்குனர்களும் முயன்று இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். ஆனால் இந்தக் கதையை இந்த மூவரும் அல்லாமல் ரபிக் என்ற இயக்குனரிடம் ஜெயமோகன் கொடுத்து இருந்தார்.
மணிரத்னம், வெற்றிமாறன், பாலா ஆகியோரும் இந்தக் கதைக்காக ஜெயமோகனை அணுகியுள்ளனர். ஆனால் அவர்களும் தோல்வியடைந்துள்ளனர். இந்த மூவரும் ஏற்கனவே ஜெயமோகன் உடன் இணைந்து பணியாற்றினர். மணிரத்னம், கடல், பொன்னியின் செல்வன் என்ற படங்களிலும், பாலா- நான் கடவுள், என்ற படத்திலும், வெற்றிமாறன், விடுதலையும் ஜெயமோகன் எழுத்தை திரைக்கதையாக மாற்றினர்.
கைதிகள் கதை மனிதநேயம் ஒருவரை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், ஆயுதப்படையில் இருப்பவர்களிடம் அந்த மனிதாபிமானம் இருக்கிறதா என்பதையும் காட்டுகிறது.
தற்போது இந்த கதை ரத்த சாட்சி என்ற பெயரில் படமாக உருவாகி வருகிறது. அனிதா மகேந்திரன் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹரிஷ் குமார், கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் படம் நேரடியாக வெளியாகவுள்ளது. டாப் டைரக்டர்களின் தேர்வாக அமைந்த இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.