20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் CIFF எனப்படும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. 2003ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும்.அதன்படி இந்த ஆண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா, 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா என்ற பெயரில் டிசம்பர் 15 முதல் 22 வரை சென்னையில் நடைபெறுகிறது.

இந்த திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகும் திரைப்படங்கள் பிவிஆர் மல்டிபிளக்ஸ், அண்ணா திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது திரைப்பட விழாவுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாள்களில் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள படங்கள், பதிவுக் கட்டணம் உள்பட விவரங்கள் வெளியிடப்படும் என தெரிகிறது. இதில் வெளிநாட்டு படங்களை தாண்டி பல தமிழ் திரைப்படங்களும் திரையிடப்படும். திரைப்பட விழா முடிவில் சிறப்பான படத்திற்கு விருது வழங்கப்படும். இது பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் அதிகாரபூர்வ தளத்தை அணுகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *