தெலுங்கு சூப்பர்ஸ்டார் நடிகர் கிருஷ்ணா காலமானார்
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் கிருஷ்ணா காலமானார். 79 வயதாகும் இவர் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை ஆவார். மாரடைப்பு காரணமாக கடந்த திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக தகால் வெளியாகி உள்ளது.
ஐம்பது வருடங்களாக சினிமா துறையில் இயங்கி வரும் இவர் 350க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் எம்.பி.யாகவும் பணியாற்றியுள்ளார். தனது 69வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அதில் நடிகர் மகேஷ் பாபுவும் ஒருவர். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். கிருஷ்ணா நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை காலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு CPR வழங்கப்பட்டது. அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதால் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.