இயக்குனர் சங்கரின் அடுத்த அதிரடி!!!

இயக்குனர் சங்கரின் அடுத்த அதிரடி!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வருபவர் சங்கர். தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவில் பல பிரம்மாண்டங்களை நிகழ்த்தி வருபவர் சங்கர். அவரது ஒவ்வொரு படமும் இந்திய சினிமாவின் முக்கிய திரைப்படங்களாக மாறியுள்ளது. இயக்குநர் ஷங்கர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தையும், தெலுங்கு டாப் ஹீரோ ராம் சரணை வைத்து RC15 என்ற இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.

இப்படங்களை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற வேள்பாரி நாவலை தழுவி பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் ஒன்றை சங்கர் இயக்க இருப்பதாகவும் அந்த நாவலை திரைப்படமாக்குவதற்கான உரிமையை அவர் வாங்கிவிட்டதாகவும் தகவல் பரவியது. சமீபத்தில் இந்திய முழுவதும் பேசப்படும் ஹீரோவாக மாறிய கேஜிஎப் ஹீரோ யாஷ் அந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

மேலும் இந்த படம் 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அந்தபடம் ஹாலிவுட் பாணியில் மூன்று பாகங்களாக, டிரையாலஜியாக உருவாக இருப்பதாகவும், அதை லைகா தயாரிக்க முன்வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *