சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘யசோதா’ திரைப்படம் சென்சார் பெற்றது!

சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘யசோதா’ திரைப்படம் சென்சார் பெற்றது!

 

இதற்கு முன்பு பார்த்திராத அதிதீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்ட ‘யசோதா’ படத்தில் சமந்தா நடித்திருக்கிறார். அதிக எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் இந்தப் படம் தற்போது யூ/ஏ சான்றிதழுடன் சென்சார் பெற்றுள்ளது.

வாடகைத்தாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஷன் மற்றும் எமோஷன் உள்ளடக்கிய கதை என்பது படத்தின் ட்ரைய்லர் காட்சிகளில் தெளிவாகியுள்ளது. இதுமட்டுமல்லாது, சமந்தாவின் திறமையான நடிப்பு, பிரம்மாண்டமான தயாரிப்புப் பணிகள் மற்றும் கதைக்கு வலுவூட்டும் பின்னணி இசை பார்வையாளர்களின் அட்ரிலின் சுரப்பை அதிகப்படுத்தி பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டும் கதையாக அமையும்.

வாடகைத்தாயாக சமந்தா நடித்திருக்கும் இந்தப் படம் திறமையான இயக்குநர்களான ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில், தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது.

பிரபல நடிகர்களான உன்னி முகுந்தன், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் வெளியாகக் கூடிய இந்த பான் இந்தியா படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில் கூட சினிமா மீது நடிகை சமந்தா காட்டும் அர்ப்பணிப்பு உலகம் முழுவது இருக்கக்கூடிய அவரது ரசிகர்களிடம் இருந்து ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளது. பிரபலங்கள் மற்றும் பார்வையாளர்களிடம் இருந்து அவர் சீக்கிரம் சரியாகி நல்ல உடல்நலனுடன் வலிமையாக திரும்பி வர வேண்டும் என எல்லையில்லாத அன்பு, வாழ்த்துகளும் கிடைத்து வருகிறது.

’யசோதா’ திரைப்படம் சமந்தாவின் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கக் கூடியத் திரைப்படம் மட்டுமல்ல முதல் முறையாக பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வெளியாக இருக்கக் கூடிய முதல் கதாநாயகியை மையப்படுத்தியப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *