விஷால்- மோடியை கிண்டலடித்த பிரகாஷ் ராஜ்

விஷால்- மோடியை கிண்டலடித்த பிரகாஷ் ராஜ்

சமீபத்தில் நடிகர் விஷால் பிரதமர் மோடியை பாராட்டி சமூக வளைதளத்தில் குறிப்பிட்டுள்ளார் அதில் தான் காசிக்கு சென்றபோது சிறப்பான தரிசனம் கிடைத்ததாகவும், காசியை இந்த அளவுக்கு அழகாக மாற்றியதற்கு நன்றி என குறிப்பிட்டு பிரதமர் மோடியையும் டேக் செய்து இருந்தார்.

நடிகர் விஷால் நடிகரை தாண்டி தயாரிப்பாளராக இயங்கி வருகிறார். இயக்குனராகவும் துப்பறிவாளன் 2 மூலம் அறிமுகமாக இருக்கிறார். இதை தாண்டி நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல பொறுப்புகளை கைவசம் வைத்துள்ளார். அதோடு ஆர் கே நகர் தேர்தலிலும் போட்டியிட முனைந்தார். இதன் மூலம் அவர் அரசயலிலும் தீவிரமாக இயங்க முயன்றுவருகிறார். இந்த நிலையில் அவர் பிரதமர் மோடியை பாராட்டி டிவிட் செய்துள்ளார்.

அதுக்கு பிரதமர் மோடியும் பதில் கொடுத்து இருந்தார். அதில் தங்களுக்கு காசியில் சிறப்பான அனுபவம் கிடைத்ததை அறிந்து மகிழ்ந்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்படி மோடி – விஷால் இடையேயான இந்த உரையாடலை பிரபல வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜ் கிண்டலடித்து இருக்கிறார்.

விஷாலின் டிவிட்டர் பதிவை குறிப்பிட்டு “shot ok… next” என்று கேட்டுள்ளார். இதற்கு விஷால் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் அளிக்கப்படலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *