மெக்கா சென்ற யுவன்!!
யுவன் சங்கர் ராஜா அவர் குடும்பத்தினருடன் மக்காவிற்கு சென்று , இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒன்றான உம்ரா/ ஹஜ் கடமையினை முடித்துள்ளார்
யுவன் சங்கர் ராஜா பொதுவாக சமூக வலைதளங்களில் தீவிரமாக இருந்தாலும், தொழில் தொடர்பான புகைப்படங்களை மட்டும் பகிர்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விஷயங்களை தன் மனைவி சஃப்ரூனின் இன்ஸ்டா பக்கத்தில் யுவன் பகிர்ந்து வருகிறார்.
சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுக்கும் யுவன், இதுவரை, “மொஹமத் ரசூலே”, “யா நபி”, மற்றும் ஏ.ஆர் ரஹ்மானின் மகனான அமீனுடன் “தலால் அல் பத்ரூ அலைனா” என்ற மூன்று இஸ்லாமிய பாடல்களை இசையமைத்துள்ளார்
அந்தவகையில், புனித பயணம் மேற்கொள்வதாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டார் சஃப்ரூன். அதனை தொடர்ந்து யுவன், சஃப்ரூன் மற்றும் சஃப்ரூனின் தம்பி அஹமத் ஆகியோர் மதினாவிற்கு சென்றனர்.
பின்னர், காபா இடம்பெற்றுள்ள மக்கா நகரத்திற்கு சென்றுள்ளனர். மத்திய கிழக்கில் உள்ள மக்கள் அணிந்திருக்கும் பாரம்பரிய உடையை யுவன் அணிந்திருந்த போட்டோவையும், மக்காவில் இஸ்லாமியர்கள் அணியும் இஹ்ராம் எனும் வெள்ளை ஆடையை அணிந்த போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.