நடிகை ரம்பா குடும்பத்துடன் வந்த கார் விபத்துக்குள்ளானது
நடிகை ரம்பாவின் கார் விபத்துக்குள்ளான செய்தி சமூக ஊடகங்களிலும், செய்திகளிலும் பரவி வருகிறது. ரம்பா அவரது குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயாருடன் காரில் செல்லும் போது, அந்த கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அந்த விபத்தால், நடிகை ரம்பாவின் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ரம்பாவுக்கு பலத்த காயம் ஏற்படவில்லை என்ற தகவல் வந்துள்ளது.
கார் விபத்து குறித்த செய்தியை ரம்பா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..,“குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லும் போது, எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதியது. என்னுடன் என் குழந்தைகளும், உறவினரும் காரில் இருந்தனர். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு உள்ளன. ஆனால் எனது பெண் குழந்தை சாஷா இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறார். எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார் .
இந்த செய்தியுடன் காரின் புகைப்படங்களை பகிர்ந்ததோடு, மருத்துவமனை அறையில் இருந்து தனது மகளின் புகைப்படத்தையும் ரம்பா பகிர்ந்துள்ளார். ரம்பாவின் இந்த பதிவைக் கண்ட பலரும் அவரது மகள் விரைவில் குணமடைய வேண்டிவருகிறார்கள்.