ஜெயிலருடன் மோதும் சங்கரின் RC15

ஜெயிலருடன் மோதும் சங்கரின் RC15

ஜெயிலர் படத்திற்க்கு போட்டியாக அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் ஷங்கரின் இயக்கத்தில் ராம் சரணின் நடிப்பில் உருவாகும் RC15 திரைப்படமும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

பான் இந்திய படமாக உருவாகும் ஷங்கரின் RC15 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றது. எனவே இப்படம் ஜெயிலர் படத்துடன் வந்தால் ஜெயிலர் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என பேசப்பட்டு வருகின்றது. ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து நெல்சன் திலீப் குமார் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். RC15 திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்க, சங்கர் இயக்க, தமன் இசையமைக்க, ராம்சரன் நடிக்கிறார்.

இதைத்தொடர்ந்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து ஜெயிலர் படத்துடன் இவ்விரு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள் மோதுவதால் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் தள்ளியபோகும் வாய்ப்பு இருப்பதாக தெரிவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *