அருண் விஜய் நடிப்பில் லண்டனின் உருவாகும் ‘அச்சம் என்பது இல்லையே’ படம்
2007-ம் வருஷம் வெளியான அஜித்தின் ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஏ.எல்.விஜய்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி ‘தலைவி’ படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிச்சிருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் நடிகர் அருண் விஜய்யுடன் கைகோத்திருக்கிறார்.
அருண் விஜய் 1995ம் ஆண்டு சுந்தர்.சியின் முறை மாப்பிள்ளை படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர். இந்த நிலையில் இயக்குனர் விஜய்-யுடன் அருண் விஜய் இணையும் படத்திற்கு ‘அச்சம் என்பது இல்லையே’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார். இவருடன் நிமிஷா சஜயனும் நடிக்கிறார். ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது