1990களில் இருந்த அண்ணாசாலையை மீண்டும் மீள் உருவாக்கம் செய்யும் மார்க் ஆண்டனி குழு

1990களில் இருந்த அண்ணாசாலையை மீண்டும் மீள் உருவாக்கம் செய்யும்  மார்க் ஆண்டனி குழு

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்‌ஷனில் உருவாகிவரும் ’மார்க் ஆண்டனி’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதில் விஷால் வித்தியாசமான கெட்டப்பில் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ்ஜே சூர்யாவின் கதாபாத்திர வடிவமைப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருது.

‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ஜாக்கி பாண்டியன் என்ற கேரக்டரில் நடிப்பதாக விஷால் அறிவித்துள்ளார். மேலும் எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான கதாபாத்திரத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருது

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.

இந்த படத்திற்காக கடந்த 1990களில் இருந்த அண்ணாசாலையை மீண்டும் மீள் உருவாக்கம் செய்ய முடிவு செய்து படக்குழு செட் அமைத்து உள்ளனர். இந்த படத்தில் விஷால் ஜோடியாக ரிது வர்மா நடித்து வருகிறார், இவர் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *