ஆதிபுருஷ் டீசர் குறித்து இயக்குனர் அளித்த பதில்

ஆதிபுருஷ் டீசர் குறித்து இயக்குனர் அளித்த பதில்

பாகுபலி, சாகோ, ராதே ஷ்யாம் என தொடர்ந்து அதிக பட்ஜெட் பான் இந்திய படங்களில் நடித்து வரும் பிரபாஸ், இந்தியா முழுவது அறியபட்ட நடிகராக மாறியுள்ளார். ஆனால் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகே, இவருக்கு பான் இந்திய நடிகர் அந்தஸ்து கிடைத்தது. அந்த வகையில் தற்போது ஹிந்தி இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில், ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிற `ஆதி புருஷ் (Adipurush)’ படத்தில் ராமர் வேடத்தில் நடித்து உள்ளார். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பான் இந்திய வெளியீட்டிற்கு இந்த படம் தயாராகி உள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்த திரைப்ப்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ் (VFX) காட்சிகள் பெரும் பேசு பொருளாகி உள்ளது. படத்தின் பல காட்சிகளில் ஹாலிவுட் படங்களின் சாயலில் இருப்பதாக நெட்டிசன்கள் சமுக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத் இதற்கு பதிலளித்து பேசியுள்ளார். “நெட்டிசன்களின் கேலி பதிவுகளைப் பார்த்து நான் வருத்தபடவில்லை. இப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3D என பெரிய திரைக்காக எடுக்கப்பட்ட படம். அதில் பார்க்கும்போது கிராபிக்ஸ் (VFX) காட்சிகளின் தரத்தை முழுமையாக உணரலாம். அந்த தரத்தை சின்ன திரையில் பார்க்க முடியாது. என்னைக் கேட்டால் படத்தின் காட்சிகள் மற்றும் டீசரை ‘youtube’ பதிவிட வேண்டாம் என்றுதான் நான் சொல்வேன். ஆனால் இன்றைய காலகட்டத்தில் படம் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதால் இதை நாங்கள் செய்யவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம் ” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *