துருவ் விக்ரமுக்கு, ரோஜா மகள் ஜோடியா?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. தற்போது FEFSI-யின் (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) தலைவராகவும் தலைமை பொறுப்பு வகித்து வருகிறார்.

இவரது மனைவும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி நடிகையாவும், தெலுங்கில் அரசியல் பிரமுகராகவும் அறிய பட்ட ரோஜா, அனைவருக்கும் பரிச்சையமான நபர். தற்போது இந்த தம்பதியரின் மகளான அன்ஷுமாலிகா தெலுங்கில் நடிகையாக அறிமுகமாகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. துருவ் விக்ரமுக்கும் இது தெலுங்கில் முதல் படமாக அமையவிருக்கிறது என்பது கூடுதல் தகவல். ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *