சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, திமுக எம்பி கனிமொழி வீட்டில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, திமுக எம்பி கனிமொழி வீட்டில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.


75 ஆவது சுதந்திர தினம் வரும் நாளை மறுநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 75வது ஆண்டு என்பதால் இந்த விழா கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு சுதந்திர தினம் ஆசாதி கா அம்ரித் மகா உத்சவ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு வீடுதோறும் மூவர்ணக் கொடி என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது. அதாவது பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்போ அல்லது மொட்டை மாடியிலோ இரவு, பகல் என வித்தியாசம் பாராமல் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசியக் கொடி விற்பனை அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. அது போல் சமூகவலைதளங்களின் முகப்பில் தேசியக் கொடியை அனைவரும் டிபியாக வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்ட பிரபலங்கள் சமூக வலைதளங்களில் டிபியாக வைத்தனர்.
தொடர்ந்து திமுகவினர் தேசியக்கொடியுடன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தையும் டிபியாக வைத்துள்ளனர். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி கூறுகையில், தேசியக் கொடியை ஏற்றுமாறு யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இது தேசப்பற்று சார்ந்த விஷயம். அவரவரே இதை செய்வார்கள். நான் என் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றுவேனா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி வீட்டில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் தேசியக் கொடியை டிபியாக வைத்து வருகின்றனர். அதேபோல் வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *