எண்ணித் துணிக பட விமர்சனம்

எண்ணித் துணிக பட விமர்சனம்

வெளிநாட்டில் இருந்து இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை ஏலத்தில் எடுத்து தன்னுடைய நகைக் கடையில் யாருக்கும் தெரியாமல் பதுங்கி வைக்கிறார், தமிழக அமைச்சர் ஒருவர். இதை கைப்பற்ற வம்சி தலைமையிலான கொள்ளைக் கும்பல் குறி வைக்கிறது.

விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் காதல் ஜோடி ஜெய்-அதுல்யா திருமண நகை வாங்க நகைக்கடைக்கு வந்த நேரத்தில் வம்சி தலைமையிலான கொள்ளைக் கும்பல் அங்கே நுழைகிறது. வைரங்களையும் சேர்த்து மொத்த நகைகளையும் கொள்ளையடித்ததோடு, அதுல்யா உள்ளிட்ட சிலரை காலி செய்து விட்டும் தப்பிச் செல்கிறார்கள். ஆனால் வம்சியிடமிருந்தும் அந்த வைரங்கள் காணாமல் போக…

இதற்கிடையே தன் காதலியை கொலை செய்த கொள்ளையர்களை பழிவாங்க ஜெய் கிளம்புகிறார். இன்னொரு பக்கம் தன் வைரங்களையும், அந்த கொள்ளையர்களையும் கண்டு பிடிக்க அமைச்சர் முயற்சிக்கிறார். மற்றொரு பக்கம் வம்சியிடமிருந்து அந்த வைரங்களை யார் கொள்ளையடித்தது என்று கொள்ளை கும்பல் தேடுகிறது. இப்படி மூவரின் தேடல்கள் ஒரே நேர்கோட்டில் வந்து இணைவதே படத்தின் மீதிக் கதை.

நாயகனாக வரும் ஜெய்க்கு அதிக வேலையில்லை என்றாலும் கிடைத்த இடத்தில் நின்று சிக்சர் அடிக்கிறார். அதிரடியிலும் தேறித் தெரிகிறார்.அதுல்யா ரவி வழக்கமான நாயகி.
கொள்ளைக் கும்பல் தலைவனாக வரும் வம்சி மிரட்டல். அமைச்சராக வரும் சுனில் ரெட்டி நக்கல் நையாண்டி என கலக்குகிறார். அஞ்சலி நாயர் வந்த கொஞ்ச நேரத்திலும் தன் இருப்பை நிரூபிக்கிறார்.

தினேஷ்குமாரின் கேமரா ஆக்–ஷன் காட்சிகளில் அகதகளம் பண்ணுகிறது. ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் சாம்.சி.எஸ். ‘ஓ.எஸ்.’ வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஒரு அதிரடி மசாலா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *