குபேரா திரைவிமர்சனம் rating 3.9/5

குபேரா திரைவிமர்சனம் rating 3.9/5

படம்: குபேரா

நடிப்பு: தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் ஷரப், திலிப் தஹில், சாயாஜி ஷிண்டே, சுனைனா, தயாரிப்பு: சுனில் நரங் , புஷ்கர் ராம் மோகன் ராவ்

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்   ஒளிப்பதிவு: நிக்கேத் பொம்மி ரெட்டி  இயக்கம்: சேகர் கம்முலா    பி ஆர் ஓ: சதீஷ் (AIM), சிவா, ரியாஸ் கே அகமது

கதை .. open பண்ணா ..!

.

இந்திய கடலில் R & D OIL AND RESEARCH DEPT மூலம் கடலில் ரிக் மூலம்  எண்ணெய் வளம்  இருப்பதை அறிந்த ஆராய்ச்சியாளர் அழகம்பெருமாள்   பிரபல பிசினஸ்மேனாக  வரும் ஜிம்மை, தொடர்பு கொண்டு கடலுக்கு அடியில் எண்ணெய் வளம் இருப்பதை அவரிடம் கூறுகிறார்…இதனை அறிந்து கொண்ட தொழிலதிபர் ஜிம், மத்திய அமைச்சரை சந்தித்து அந்த எண்ணெய் வளத்தை தங்கள் நிறுவனத்திற்கு கொடுக்கும்படி கூறுகிறார்…படத்தில் ஆரம்பமே பிரம்மாண்டமான கப்பல், மில்லியனர் வீடு என பிரமிக்க வைக்கிறது .. மத்திய அரசின் எரிவாயு திட்ட ஒப்பந்தத்தை பெறுவதற்காக ரூ.1 லட்சம் கோடியை சட்ட விரோதமாக கைமாற்ற தொழில் அதிபர்(நீரஜ் மித்ரா) ஜிம் சர்ப் நினைக்கிறார்..!   ஆனால் 40 ஆயிரம் கோடி பணத்தை அதிகாரிகளுக்கு எப்படி வழங்குவது என்பது பற்றி..பேசும் போது .., சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகார்ஜுனா (தீபக் தேஜ்)உதவியை நாடுகிறார்கள் . அவரது மனைவி சுனைனா , புஜ்ஜி, என்ற பாப்பா இவர்களுக்காக நாகார்ஜுனா இந்த தவறான செயலை செய்வதற்கு ஒத்துக் கொள்கிறார்

சட்டவிரோத பரிவர்த்தனைக்காக கல்வி அறிவு இல்லாத தனுஷ் குஷ்பு,  திவ்யான் உள்ளிட்ட 4 பிச்சைக்காரர்களை நாகார்ஜுனா தேர்வு செய்கிறார். அவர்கள் பெயரில் தொழில் நிறுவனங்களை தொடங்கி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிறார். முன்னாள் சிபிஐ அதிகாரியை (நாகார்ஜுனா) கையில் போட்டுக்கொண்டு தனியார் நிறுவன அதிபர்  திட்டம் போடுகிறார். அதன்படி சில பிச்சைக்காரர்களை பினாமியாக்கி அவர்களின் பெயரில் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் லஞ்சப் பணத்தை கைமாற்றி தர முடிவு செய்யப்படுகிறது. இதற்காக பிச்சைக்காரராக இருக்கும் தேவா  உள்ளிட்ட சிலரை அழைத்து வந்து பினாமியாக்குகிறார்கள்.

ஒவ்வொரு பரிவர்த்தனை முடிந்த பின்பும் சம்பந்தப்பட்ட பிச்சைக்காரர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கிடையில் தனுசை கொலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்படும்போது அவர் தப்பித்து விடுகிறார். எதிர்பாராத விதமாக பண பரிவர்த்தனையும் தடைபடுகிறது.  பத்தாயிரம் கோடி குறிப்பிட்ட நபருக்கு போய் சேராமல் நாகார்ஜுனா நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார் இதனால் தனுசை வலை வீசி தேடுகிறார்கள்.   தனுஷ் உயிரோடு கிடைத்தால்தான் பணப்பரிவர்த்தனை முழுமை அடையும் என்பதால் அவரைத் தேடி நாகார்ஜுனா தலைமையில் குழுக்களாக பிரிந்து தேடுகிறார்கள்.   அவர் வில்லன் கும்பலிடம் இருந்து தப்பித்து மும்பை பகுதியில் ஒவ்வொரு இடமாக ஓடிக் கொண்டே இருக்கிறார் ஒரு கட்டத்தில்  ஒரு ரெயில் நிலையத்தில் காதலனால் ஏமாற்றப்பட்டு அழுது கொண்டிருக்கும் ராஷ்மிகாவை, தனுஷ் சந்திக்கிறார்கள்  இப்போது  ராஸ்மிகா  செல்போனில் இருந்து நாகார்ஜுனாவுக்கு தனுஷ் போன் செய்ய இப்பொழுது அந்த கும்பல் ராஸ்மிகாவையும் துரத்துகிறது .தான் சிக்கலில் சிக்கிருக்கிறோம் என்பதை உணர்ந்ததும் தனுஷ் சதிகார கூட்டத்திடமிருந்து தப்பிப்பதும் அந்த சமயத்தில் தன் எதிர்வரும் ராஷ்மிகா மந்தன்னாவை வம்படியாக தனுஷ் தன்னுடன் சேர்த்துக் கொண்டு அவரையும் ரவுடி கூட்டத்திடம் சிக்க வைத்து சிக்கலை அதிகரிப்பதும் காட்சிகளை விறுவிறுப்பாக்குகிறது

படத்தின் பெரும்பலம் என்று வில்லனாக வரும் ஜிம்மை கூறலாம். இவருக்கான பிஜிஎம், இவருக்கான உடல் மொழி, இவருக்கான உடை என இவரை சுற்றி நடக்கும் அனைத்தும் இவருக்கு பெரும் பலத்தை கொடுத்திருக்கிறது…தனது வில்லத்தனத்தை தனது முகத்திலே காட்டி அனைவரையும் மிரள வைக்கிறார் ஜிம். நாயகியான ராஷ்மிகா, மிகவும் யதார்த்தமான கதாபாத்திரமாக உள்ளே வந்து தனுஷிடம் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரமாக தனது கேரக்டரை மிகவும் அழகாக செய்து முடித்திருக்கிறார்…மற்றபடி சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நாசர், பக்ஸ் ,பாக்கியராஜ் உள்ளிட்ட நடிகர்களும் தங்களின் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் மனதிற்கு இதமான ஒன்றுதான். வழக்கம் போல் பின்னணியில் தனக்கான மாஸ் இசையை கொடுத்து அசத்தியிருக்கிறார் டிஎஸ்பி.

இயக்குனர் சேகர் கம்முலா, மும்பை பின்னணியில் சம்பவங்கள் நடப்பது போல கதையை எழுதி இருக்கிறார் . இதில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா ஆகிய எல்லோரையும் சிறப்பாக நடிக்க வைத்து இருக்கிறார்கள்  தனுஷ் பிச்சைக்காரராக  அவரின் தோற்றமே படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்

தேவி ஸ்ரீ பிரசாத், இசை பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக இருக்கிறது .  போய் வா போய் வா போய் வா நண்பா” பாடல் துள்ளாட்டம் போட வைக்கிறது .
படம் முழுக்க தனுஷ் வரும்போது வரும் அந்த இசை உருக வைக்கிறது…இந்த படத்திற்கு கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். மூன்று மணி நேரம் என்பதை கொஞ்சம் குறைத்திருக்கலாம் பல காட்சிகள் நீளமாக இருப்பது படத்தை தொய்வு ஏற்படுத்தி உள்ளது. படத்தொகுப்பாளர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மற்றும் இப்படத்தில் ஆர்ட் டைரக்டர் அருமையாக பணிபுரிந்து இருக்கிறார் வில்லனின் வீடு, ஜெயபிரகாஷ் வீடு, கட்டு கட்டான பணம், கப்பல் ,குப்பை மேட்டில் வாழும் மனிதர்கள், பிச்சை எடுக்கும் அந்த மனிதர்களின் இருப்பிடம், இப்படி எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் தனியாக தெரிகிறார் . hatsoff ..! நிகேட் அவர்களின் ஒளிப்பதிவு படத்தினை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்று விட்டது… கதையின் வேகத்துக்கு ஈடு கொடுத்து அதன் காமிரா கண்கள் வேகம் எடுத்தது அற்புதம் ..!

நல்ல கருத்தை நச் என சொன்னதில் குபேரா நிமிர்ந்து நிற்கிறான் ..!

தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என்பது உறுதி ..!

 

குபேரா – வெற்றி மகுடம் 

நம்ம tamilprimenews.com Rating 3.9/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *