யுனிக் ஸ்டார் நிகில் பிறந்தநாளன்று வெளியான ‘சுயம்பு’ படத்தின் மேஸிவ் போஸ்டர்

யுனிக் ஸ்டார் நிகில் பிறந்தநாளன்று வெளியான ‘சுயம்பு’ படத்தின் மேஸிவ் போஸ்டர்

பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், யுனிக் ஸ்டார் நிகில் நடிக்கும் ‘சுயம்பு’ படத்தின் மேஸிவ் போஸ்டர் நிகில் பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

‘கார்த்திகேயா 2’ படத்திற்கு பிறகு யுனிக் ஸ்டார் நிகில் தேசிய அளவிலும் பான் இந்தியா அளவிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்பொழுது மற்றொரு பான் இந்திய படமான ‘சுயம்பு’ இவரது இருபதாவது படமாக உருவாகிறது. ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் எபெக்ட் படமாக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகிறது. நடிகர் நிகில் இதற்கு முன்பு பார்த்திராத கதாபாத்திரத்தில் வலுவான போர் வீரராக நடிக்கிறார். இந்த படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் இருவரும் இணைந்து பிக்சல் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் தயாரிக்கின்றனர். தாகூர் மது இந்த படத்தை வழங்குகிறார்.

போர் பின்னணியில் செங்கோல் ஏந்தியபடி நிகில் மற்றும் சம்யுக்தா இருவரும் இருக்கும்படி ‘சுயம்பு’ படக்குழு மாஸ் போஸ்டர் ஒன்றை நிகில் பிறந்தநாளன்று வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரில் நிகில் தீவிரமாகவும் வலுவானவராகவும் போர்க்களத்தின் நடுவில் வாளேந்தி நிற்கிறார். வில் மற்றும் அம்புடன் சம்யுக்தாவும் வீரப்பெண்மணியாக இந்த போஸ்டரில் இருக்கிறார். இந்த போஸ்டரே படம் எந்தளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

சக்தி மற்றும் நீதியின் சின்னம் தான் செங்கோல். பண்டைய ராஜ்ஜியங்கள் முதல் இந்தியாவின் சுதந்திரம் வரை செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.  நமது பண்டைய வரலாற்றின் படி, ராமர் தனது ஆட்சியின் போது செங்கோல் வைத்திருந்தார். நீதியுடன் நடக்கும் ஆட்சிக்கு இது முன்னுதாரணமாக அமைந்தது.

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் செங்கோலை நிலைநாட்டினார்.

தற்போது ‘சுயம்பு’ திரைப்படமும் இந்த வலுவான கதைக்களத்தை சுற்றியே அமைந்துள்ளது. வரவிருக்கும் டீசர் இந்த உலகத்தை இன்னும் விரிவாகக் காட்ட இருக்கிறது.

நபா நடேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: பரத் கிருஷ்ணமாச்சாரி,
தயாரிப்பாளர்கள்: புவன் மற்றும் ஸ்ரீகர்,
பேனர்: பிக்சல் ஸ்டுடியோஸ்,
வழங்குபவர்: தாகூர் மது,
ஒளிப்பதிவு: கே.கே.செந்தில் குமார்,
இசை: ரவி பஸ்ரூர்,
எடிட்டர்: தம்மிராஜு,
வசனம்: விஜய் காமிசெட்டி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்கள்: எம் பிரபாகரன், ரவீந்தர்,
ஸ்டண்ட்: கிங் சாலமன், ஸ்டண்ட் சில்வா,
பாடல் வரிகள்: ராமஜோகய்யா சாஸ்திரி,
மக்கள் தொடர்பு: வம்சி-சேகர் (தெலுங்கு),
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர் (தமிழ்),
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

 

தொடர்பு:

Media Contact: D’one
Point of contact : Abdul.A.Nassar
Email ID: d.onechennai@gmail.com
Ph. No:  99418 87877

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *