ரெட்ரோ திரைவிமர்சனம்

ரெட்ரோ …திரைவிமர்சனம்
நடிப்பு: சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், கருணாகரன், பிரகாஷ்ராஜ், சுஜித்சங்கர், சுவாசிகா, விது அவினாஷ் ..தயாரிப்பு: ஜோதிகா சூர்யா
இசை: சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ்யாஸ் கிருஷ்ணா இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ் பி ஆர் ஒ,: யுவராஜ், சதீஷ் S2
கதை .. ஓபன் பண்ணா …
தாய் தந்தையை இழந்த சூர்யாவை சிறுவயதிலிருந்தே வளர்த்து வருகிறார் ஜோஜூ ஜார்ஜின் மனைவி. ஆனால் அந்த குழந்தையை தத்து மகனாக கூட ஏற்காமல் அடியாள்போல் பார்க்கிறார் ஜோ ஜு … குழந்தைப் பருவத்திலிருந்தே சிரிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல், சிரிக்கத் தெரியாதவனாக வளர்ந்து வாலிபன் ஆகிறார் சூர்யா. தாதாவாக வலம் வரும் ஜோஜூ ஜார்ஜ் தனது அடியாட்களில் ஒருவராகவே சூர்யாவை கருதுகிறார்… தாயை இழந்த போது காசியில் தான் சிறு வயதில் சந்தித்த பூஜா ஹெக்டேவை காதலித்து திருமணம் செய்ய முடிவெடுக்கும் சூர்யா, அதன் பிறகு அடிதடி சண்டை இனி வேண்டாமென முடிவெடுக்கும் போது எப்படியும் தன்னை ஜோ ஜு கொன்று விடுவார் என்று தெரிந்து .. ஜோஜி யின வெளி நாட்டு க்கு கடத்த இருந்த தங்க மீனை இவர் திருடி மறைத்து வைத்து விடுகிறார் .சூர்யாவின் திருமண தினத்தன்று தங்கமீன் தொடர்பான பிரச்சனையில் ஜோஜூ ஜார்ஜுக்கும் சூர்யாவிற்கும் மோதல் வெடிக்கிறது.இந்நிலையில் சூர்யாவின் காதலியை ஜோ ஜு கொல்ல முயலும்போது அவரது கையை சூர்யா வெட்டுகிறார்..கலக்கம் அடைந்த காதலி அவரை மற்றும் அந்த ஊரை விட்டு செல்கிறார்… சூர்யாவும் சிறைக்குச் செல்ல நேரிடுகிறது .
.
சில வருடங்களுக்குப் பிறகு பூஜா ஹெக்டே அந்தமானில் இருப்பது தெரியவர, ்சிறந்த அடியாள் கடத்தல் கும்பலின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பி அந்தமான் செல்கிறார் சூர்யா. சிரிக்கவே தெரியாத சூர்யாவுடன் சிரிப்பின் மூலம் நோய்களை குணப்படுத்தும் டாக்டர் ஜெயராமுடன் இணைந்து அந்தமான் செல்கிறார்… காதலியை தேடி கண்டுபிடித்து மணக்க எண்ணும் சூர்யா அடிதடியை கைவிட்டு டூப்ளிகேட் சிரிப்பு டாக்டர் ஆகி அங்குள்ள அடிமை மக்களை சிரிக்க வைக்க முயல்கிறார் . ஆனால் சூழ்நிலை அவரை மீண்டும் கோபக்காரனாக மாற்றுகிறது. ..அந்தமானில் உள்ள மக்களை கொத்தடிமை தொழிலாளர்களாக வைத்து வேலை வாங்குவதுடன் அவர்களுக்குள்ளே சண்டையிட வைத்து அவர்கள் செத்து மடிவதை பார்த்து சந்தோஷப்படும் கொடூர மனம் படைத்த ஜமீன் நாசர் அவர் மகன் இருவர்க்கும் சூர்யாவுக்கும் மோதல் வெடிக்கிறது… சூலாயுதம் அடயாளம் கொடிய ஒரு குழந்தை யால் பிற்காலதில் தான் கொல்லபடுப்பாடுவோம் என நம்பும் நாசர் அடிமைகளுக்கு பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தைகளை சோதனை செய்து அடிமை ஆக்குகிறார் .. அதில் தப்பி போய் அடியாளாய் அந்தமான் வந்த சூர்யா ஆடும் ருத்ர தாண்டவம் ..இறுதியில் வெல்வது யார்? தங்க மீன் என்ன ஆனது என்பது தான் பல திருப்பங்களுடன் உள்ள மீதி கதை ..
சிரிக்கவே தெரியாத சீரியஸ் முகத்துடன் சிறு வயதில் அறிமுகமாகும் சூர்யா ஆக்சன் காட்சிகளில் அதிரடி நடிப்பால் நம்மை அசர வைக்கிறார்.அவர் இரண்டாம் பாதியில் கண்ணாடி முன் சிரிக்க முயலும் காட்சி போதும் அவர் நடிப்புக்கு சான்று ..!ஆக்ரோஷமான சண்டை காட்சிகளில் சூர்யாவின் மிரட்டல் wow ..!
பூஜா ஹெக்டே எளிமையான சேலையுடன் வந்து அழகான நடிப்பை வெளிப்படுத்து கிறார்…சூர்யா ஆவேசம் கொள்ளும் நேரத்தில் அவரது கோபத்தை கட்டுப்படுத்த நினைப்பது ..சூர்யாவின் மீது கொண்ட காதலை உள்ளுக்குள் வைத்து கொண்டு தவிக்கும் காட்சிகளில் பூஜா ராக்ஸ்..!
வளர்ப்பு அப்பா ஜோஜி ஜார்ஜ் உருவம் அவருக்கு பெரிய பிளஸ் ..தமிழ் சினிமாவில் அவருக்கென்ற்று பெரிய இடம் உள்ளது ..!
ஸ்ரேயா கிருஷ்ணாவின் ஒளிப்பதிவுதான். சூர்யா பூஜா திருமண நிகழ்வில் வரும் காட்சியை ஒரே ஷாட்டில் படம் பிடித்திருப்பது awesome …!
விறுவிறுப்பான முறையில் திரைக்கதை,பல திருப்பங்கள் இருந்தாலும் ஒரு நேர்கோட்டில் கொண்டு வந்து கிளைமாக்ஸ் அமைத்து அசர வைத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜு and TEAM க்கு hatsoff
நம்ம tamilprimenews.com Rating 4.1/5