வல்லமை திரைவிமர்சனம்

வல்லமை திரைவிமர்சனம்

படம்: வல்லமை

நடிப்பு: பிரேம்ஜி, திவ்ய தர்ஷினி, தீபா சங்கர், முத்துராமன், சி ஆர் ரஜித், சூப்பர் குட் சுப்பிரமணியன், சுப்பிரமணியன் மாதவன், விது, போராளி திலீபன்

தயாரிப்பு: பேட்டலர்ஸ் சினிமா   இசை: ஜி கே வி  ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி  இயக்கம்: கருப்பையா முருகன்   பி ஆர் ஓ: நிகில் முருகன்

கதை .. open பண்ணா .

கிராமத்தில் மனைவி, மகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த விவசாயி பிரேம்ஜியை மனைவியின் திடீர் மரணம் மொத்தமாக புரட்டிப்போடுகிறது. இதன் பிறகு அந்த ஊரில் இருக்க மனதின்றி மகளுடன் சென்னை வருகிறார். இப்போது அவரது ஒரே கனவு, மகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பது தான். சென்னையில் கிடைத்த புதிய ஆட்டோ நண்பர் உதவியுடன் வாடகை வீடு, வேலை, மகளின் பள்ளிப் படிப்பு என்று அனைத்தும் அமைகிறது.

இதற்கிடையே உடல் நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து தந்தையிடம் ஒரு நாள் மகள் பகிர்ந்து கொள்ள, மகளின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக தந்தையும் மகளும் மருத்துவரை சந்திக்கிறார்கள். மருத்துவ பரிசோதனையில் சிறுமி தனக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப் பதை மருத்துவர் உறுதிப்படுத்த…மயக்க நிலையில் தன்னை யாரோ சீரழித்ததை டாக்டர் சொல்வதை மறைந்திருந்து கேட்கிறார் பிரேம்ஜி மகள்…!அந்தக் காமுகனை கண்டுபிடித்து கொல்ல தந்தையும் மகளும் திட்டமிடுகிறார்கள். அவனை கண்டு பிடித்து பழி வாங்கினார்களா? அதன் பிறகு நடப்பது என்ன என்பது பதற்றமும் பரபரப்புமான கிளைமாக்ஸ்  .

 

அப்பாவாக பிரேம்ஜி, மகளாக திவ்யதர்ஷினி. …  மகளே தன் உலகம் என்று வாழ்ந்து வரும் கிராமத்து தந்தை, எந்த வம்பு தும்புக்கும் போக விரும்பாத அந்த தந்தை மகளுக்கு நேர்ந்த கொடுமைக்காக எந்த எல்லைக்கும் போக துடிக்கும் இடத்தில் உள்ளுக்குள்ளே பொங்கி வடியும் ஒரு எரிமலையின் சீற்றத்தை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் பிரேம்ஜி.  மகளுக்கு ஒரு நல்ல தந்தையாக மட்டுமின்றி நண்பனாகவும் அவரது பாசப்பயணம் படத்தை தூணாக தாங்கி நிற்கிறது. இதுவரை காமெடியாகவே பார்த்து பழக்கப்பட்ட வரை இப்படி ஒரு கேரக்டரில் பார்க்கும்போது நிஜமாகவே பிரேம் ஜி பிரமிக்க வைக்கிறார் ..!.

மகளாக நடித்த அந்த குட்டிப் பெண் இன்னொரு நடிப்பு  அருமை..!

 

போலீஸ் இன்ஸ்பெக்டராக ’வழக்கு எண்’ முத்துராமன், கான்ஸ்டபிளாக சூப்பர் குட் சுப்பிரமணி, தொழிலதிபராக சி.ஆர்.ரஜித், கார் ஓட்டுநராக சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடும் இளைஞராக விது, பள்ளி ஊழியராக திலீபன் மருத்துவராக வரும் தீபா சங்கர் அனைவரும் கொடுத பாத்திரத்தை  சிறப்பாக செய்து உள்ளனர் .

இசையமைப்பாளர் ஜி.கே.வி. இசை  மனதுக்கு நெருக்கமானது. .காட்சி அமைப்புகள் பலஇடங்களில் ரொம்ப நெருடலாக உள்ளது .. அந்த சின்ன பொண்ணுக்கு ஏற்பட்ட வலி வேதனை இரண்டாம் பாதியில் நமக்குள் கடக்க தவறியது திரைக்கதை நகர்வு அமெச்சூர் தானமாக இருந்ததும் ஒரு காரணம் ..!  கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியதோடு தயாரிக்கவும் செய்திருக்கிறார் கருப்பையா முருகன். பெண் பிள்ளைகள் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் தற்போதைய அவலத்தை கிடைத்த  budjet இல் சிறப்பாக  சொல்லி இருக்கிறார்.

மொத்தத்தில் இந்த வல்லமை ….. நம்ம tamilprimenews.com rating 2.6/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *