அப்பல்லோ ஹாஸ்பிடல் சார்பாக நடந்த கோலான் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு பத்திரிகையாளர் சந்திப்பு…!

அப்பல்லோ ஹாஸ்பிடல் சார்பாக நடந்த கோலான் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு பத்திரிகையாளர் சந்திப்பு…!
இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் உலகெங்கும் எல்லா
வகை புற்று நோய்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில்
பெருங்குடல்/ மலக்குடல் புற்று நோயும் ஆண்டுதோறும்
அதிகரித்தபடி உள்ளது.
வளர்ந்த மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் குடல் புற்றின்
பாதிப்பு குறைவு என்றாலும், மாறிவரும் நம் வாழ்வியல்
பழக்கங்களால் சமீப காலமாக நம் நாட்டிலும் இதன் பாதிப்பு
அதிகமாகி வருகிறது. சாதாரணமாய் 50 வயதுக்கு
மேற்பட்டவர்களைப் பாதிக்கும் இந்நோய் நம் நாட்டில் 40 – 45
வயதுள்ளவர்களைக் கூட தாக்குகிறது என்பது கவலை அளிக்கும்
புள்ளி விவரம் ஆகும்.
குடல் புற்று நோய் (கோலான் கேன்சர்) நம்மில் பத்தாயிரம் பேரில்
ஒருவரை பாதிக்கும் சாத்தியம் உள்ளது. நோய் கண்டறியப்பட்ட
பிறகு மூன்றில் இரண்டு பங்கு பேர் அந்த ஆண்டிலேயே உயிர்
இழக்கும் அபாயம் உள்ளது. அதன் காரணம் இந்நோய் தாமதமாய்
முற்றிய நிலையில் கண்டறியப் படுவதுதான்.
அபாயத்தைத் தவிர்க்கும் உபாயம் என்ன?
புற்று நோயாய் வலுக்கும் முன்னே பல ஆண்டுகளாய் இது
பெருங்குடல் உள்பக்கம் சிறு மரு(பாலிப்) போல் தோன்றி மெல்ல
வளரும். இந்த மரு நிலையில் அது நமக்கு எந்த வித உபாதையும்
தராது. எனவே அந்த நிலையிலேயே அதைக் கண்டுபிடிக்க
மருத்துவர்கள் முன்னெச்சரிக்கையாக பெருங்குடல் உள்ளே
பார்க்கும் பரிசோதனை (கோலனாஸ்கோப்பி) செய்தால் மட்டுமே
சாத்தியப்படும்.நிகழ்வில் இது பற்றி சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சி கோலான் கேன்சர் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.