நிறம் மாறும் உலகில் திரை விமர்சனம்
படம்: நிறம் மாறும் உலகில்
நடிப்பு: பாரதிராஜா, ரியோ ராஜ், நட்டி, சாண்டி, யோகிபாபு, துளசி, ஆதிரா, கனிகா, லவிலின், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ் காந்த், காவ்யா, அயிரா கிருஷ்ணன், முல்லையரசி, மைம் கோபி, விஜி, நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்த தயாரிப்பு: எல்.கேத்ரின் ஷோபா மற்றும் லெனின் இசை: தேவ் பிரகாஷ் ரேகன் , மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு: மல்லிகா அர்ஜூன் இயக்கம் : பிரிட்டோ ஜே பி. ..பி ஆர் ஒ: யுவராஜ்

காதல் பிரச்சினையில் அம்மாவுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகர் ரயிலில் தோழியின் இருப்பிடம் நோக்கி பயணமாகிறார். ரயிலில் அவரை சந்திக்கும் டிக்கெட் பரிசோதகர் யோகி பாபு, லவ்லினின் நிலையை கேட்டு அறிந்து கொள்கிறார். அம்மா எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு உணர்த்தும் வகையில் நான்கு கதைகள் சொல்கிறார். நான்குமே தாயின் பெருமையை உயர்த்தி பிடிக்கும் கதைகள்.ஒரே படத்தில் 5 கதைகள் கொண்டதாக உருவாகியிருக் கிறது நிறம் மாறும் உலகில்…!
முதல் கதையில் அம்மா பாசத்திற்காக ஏங்கும் மும்பை தாதாவாக நட்டி வருகிறார். அவரைப் போட்டுத்தள்ள துடிக்கும் கேரக்டரில் வரும் சுரேஷ் மேனன் தமிழ்நாட்டில் இருந்து ஓடிவந்த கிராமத்து காதல் ஜோடிகளை இதற்கென பயன்படுத்திக் கொள்கிறார். காதலன் கத்தி நட்டியை பதம் பார்த்ததா?
பாரதிராஜா வடிவுகரசி நடிப்பில் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் அம்மா, அப்பா கதை இரண்டாவது கதை.!
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட அம்மாவை காப்பாற்றத் துடிக்கும் மகனின் கதை மூன்றாவது….தாயை காப்பாற்ற ஆபரேஷனுக்கு தேவையான பணம் திரட்ட துடிக்கும் மகன். ஆனால் அந்த மகன் ஒருவரை கொலை செய்தால் பணம் கிடைக்கும். மகன் கொலை செய்தானா, தாயின் உயிர் காப்பாற்றப்பட்டதா?
அம்மா என்ற உறவுக்காக தனது காதலை தூக்கி எறியும் இளைஞரின் கதை நான்காவது. ..அனாதை என்பதால் அந்த ஆட்டோ டிரைவரை மணக்க முன் வரும் இளம்பெண், அவன் திடீர் தாயுடன் வந்து நிச்சயம் செய்ய வர, அப்போதே அவன் காதல், காதலியால் நிராகரிக்கப்படுகிறது. காதலனும் அம்மாவுக்காக காதலை புறம் தள்ளுகிறான்.
தேவ் பிரகாஷ் ரேகன் , மணிகண்ட ராஜா இசை அமைத்துள்ளார்.
புது இயக்குனர் பிரிட்டோ ஜே பி. தைரியமாக ஒரே படத்தில் 5 கதைகளை தந்து ரசிகர்களை அரங்கில் அமர வைக்கும் அவரது முயற்சிக்கு கிடைத்த வெற்றி……முத்துக்களை சரம் கோர்த்தது போல 4 கதைகளை 5 வது கதைக்குள் பாசத்தின வலிமையை உணர செய்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்
நிறம் மாறும் உலகில் – பாசம் தடம் மாறும் போது ….வாழ்க்கையின் நிறம் மாறும் .. பாசமே நிரந்தரம் ..!
நம்ம tamilprimenews,com Rating 3.5/5

