விடுதலை 2 திரைவிமர்சனம்
விடுதலை முதல் பாகத்தில் சூரி காவல் துறையில் ஓட்டுநராக பணி கிடைத்ததும் தன் அனுபவங்களை தாய்க்கு கடிதம் எழுத அவர் குரலில் கதைகளம் விரிகிறது.. பெருமாள் வாத்தியார் எனும் போராளியை கைது செய்ய சூரி பெரிய அளவில் உதவுகிறார்.. இங்கே விடுதலை 2 ம் பாகம் தொடங்குகிறது..
விஜய் சேதுபதி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் காட்டு வழியில் அவரின் வாழ்க்கை பயணத்தை கதையாக சொல்ல சொல்ல பெருமாள் வாத்தியார் போராளி ஆன கதை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் கண்கள் வழியே நமக்கும் படைக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்..!
ஜமீன்களில் வேலை செய்யும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள். மேலும் ஆலை அதிபர்கள் அவர்கள் உழைக்கும் ஒடுக்க பட்ட மக்களை அடக்கி வைக்க பல கொடுமைகளை நடத்துகின்றனர்.. இதற்கு எதிராக நமக்கான உரிமைகளை நாம் போராடி தான் பெற்று கொள்ள வேண்டும் என்பதை தோழர் KK என்கிற பாத்திரத்தில் கிஷோர்
இவரின் பொதுவுடமை பேச்சுக்களை கேட்டு பெருமாள் வாத்தியார் என்கிற விஜய் சேதுபதி போராளியாக மாறி மக்கள் படை குழுவிற்கே தலைவராகிறார்..!
ஆலை அதிபரின் மகளான மஞ்சு வாரியார் உழைக்கும் மக்களுக்காக சங்கம் வைக்க இறங்கி போராடுகிறார்.. இவர்களுக்குள் காதல் மௌனமாக மலர கலயாணம் செய்து கொள்கிறார்கள்..
சர்க்கரை ஆலை பிரச்சனை வளர வளர போராட்டம் அதிகரிக்க தோழர் கிஷோர் கொலை செய்ய படுகிறார்.. அதற்கு பழிவாங்க முக்கிய நபர்களையெல்லாம் வெட்டி சாய்கிறார் பெருமாள் வாத்தியார். வடக்கிலிருந்து மாவோயிஸ்ட் ஆட்களை கூட்டி வந்து தான் சார்ந்த மக்களுக்கு போராட்ட முறைகள் கற்று கொடுப்பது.. ரெயிலுக்கு வெடிகுண்டு வைப்பது.. அதே வெடிகுண்டு வெடித்து தயாரிக்கும் தோழர்களை கண் முன்னே இழப்பது..
இடது சாரி கொள்கையை தூக்கி பிடிக்கும் கதையில் பல இடங்களில் பிரச்சார நெடி அதிகமாக அடிப்பதை தவிர்த்திருக்கலாம்.
போராளிகளுக்கு தேவை தொழிலாளிகளின் ஒற்றுமை அதை உணர்த்தும் இடது சாரி சித்தாந்தம் இயக்குனர் ஆழமாக அதே நேரம் இலகுவாக பதிய வைக்க முயற்சி செய்துள்ளார்..
கதை படி பெருமாள் வாத்தியாரை காட்டு வழியே கூட்டி செல்லும் வழியில் தன் தவறை மறைக்க சேத்தன் செய்யும் செயல்கள் அதிர வைக்கும் காட்சிகள்.. பெருமாள் வாத்தியார் கடைசியில் என்ன ஆனார்… காவல் துறைக்கும் மக்கள் படைக்கும் என்ன நடந்தது.. அரசாங்கம் இதை எப்படி கையாண்டது.. என்பதை செங்கொடி ஏந்திய கைகளில் துப்பாக்கி கொடுத்து காட்சிகளை பரபரப்பாக்கி பாகம் 2 கிளைமாக்ஸ் மீண்டும் சூரியின் கைகளில் (ஜீப் driving )ஒப்படைத்து விட்டு பாகம் 3 க்கு விதை போடுகிறார் இயக்குனர்.
கிஷோர், மஞ்சு வாரியார், கென் கருணாஸ், போஸ் வெங்கட், ராஜீவ்மேனன், GVM, இளவரசு, சரவணசுப்பையா, தமிழ் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்… குறிப்பாக ராஜீவ் மேனன் தலைமை செயலாளருக்கு அவ்வளவு பொருத்தம்.. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் காட்டு வழி கடும் பயணத்தை அருமையாக காட்சி படுத்தி உள்ளார்.. இசை இளையராஜா பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம் பாடல்கள் இருந்தாலும் வழி நெடுக இன்னும் காட்டு மல்லி வாசம்..!
என்ன தான் ரயில் குண்டு வெடிப்பை விஜய் சேதுபதி பார்வையில் ஞாய படுத்த பார்த்தாலும் தவறு தவறு தான்… அதற்கு சொல்லும் காரணம் பலமற்று நிற்கிறது..!
மொத்தத்தில் விடுதலை 2 கம்யூனிசம் பொதுவுடமை பேசும் படமாக இந்த கால 2k கிட்ஸ் களுக்கு பாடம் நடத்தி உள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்..!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.7/5