டியர் திரை விமர்சனம்!
இயக்குனர் – ஆனந்த் ரவிச்சந்தர்
நடிகர்கள் – ஜிவி பியரகாஷ் குமார் , ஐஸ்வர்யா ராஜேஷ்.
இசை – ஜிவி பியரகாஷ் குமார்
தயாரிப்பு – ரோமியோ பிக்சர்ஷ் , வருண்
சின்னதா ஒரு டிவி சேனலில் வேலை பார்த்து வரும் அர்ஜூன் என்ற கதாபாத்திரம் லேசாக சத்தம் கேட்டாலும் எழுந்து விடும் பழக்கம் கொண்டவர். குன்னூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தீபிகா தூக்கத்தில் முரட்டுத்தனமாக குறட்டை விடும் பழக்கம் உடையவர். அதன் காரணமாகவே திருமணம் லேட்டாகி வருகிறது. பெரிய சேனலில் வேலைக்கு செல்ல வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் தீபிகாவை திருமணம் செய்துக் கொண்ட பின்னர், தூங்க கூட முடியாமல் ஒரு கட்டத்தில் தனது வேலையையே இழக்கிறார். இதற்கு மேல் செட்டாகாது என நினைக்கும் அவர் தீபிகாவிடம் டைவர்ஸ் கேட்க, அதன் பின்னர் என்ன ஆனது என்பது தான் டியர் படத்தின் கதை.
ரெபல், கள்வன் படங்களை தொடர்ந்து இந்த வாரமும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் படம் வெளியாகிறது என்பதே ஒரு தடை தான். கடந்த ஆண்டு இதே போல ரசிகர்களை கஷ்டப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷும் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து நடித்துள்ள நிலையில், இந்த படம் நன்றாக இருந்தாலும் கூட ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வார்களா? என்பது பெரிய கேள்வி தான். படத்தின் கதையும் அப்படியே மணிகண்டன் நடித்து வெளியான குட் நைட் படத்தில் இடம்பெற்ற குறட்டை படத்தின் கதை. காதல், ஆக்ஷன் படங்கள் வந்துக் கொண்டு தானே இருக்கிறது. அதே போலத்தான் குறட்டை என்பது ஒரு ஜானர். அதில், இன்னொரு படம் வந்தால் என்ன தவறு என்றும் இந்த படம் குட் நைட் படத்துக்கு முன்பாக 4 வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பித்து விட்டோம் என்றெல்லாம் பேட்டியில் விளக்கம் கொடுத்தாலும், ரசிகர்கள் இந்தப் படத்தை குட் நைட் படத்துடன் தான் கம்பேர் செய்து பார்ப்பார்கள்.
குட் நைட் படத்தை விட புரொடக்ஷன் வேல்யூ இந்த படத்தில் நல்லாவே தெரிகிறது. ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷை தாண்டி காளி வெங்கட் மற்றும் பிளாக்ஷீப் யூடியூப் புகழ் நந்தினியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. ரோகிணி, இளவரசு உள்ளிட்டோர் தங்கள் தேர்ந்த நடிப்பை அளவாக வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கின்றனர்.
இந்தப்படத்திற்கு பெரிய பலமாக பிண்ணனி இசை அமைந்துள்ளது, பாடல்கள் கெட்பதற்கு நன்றாகவே இருந்தது, இசை தான் படத்தை நகர்த்தி செல்ல உதவியாக இருக்கிறது, படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்துள்ளனர். இந்தப் படம் விஷுவலாக புதிதாக இருந்தது,
படத்தின் கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதை மற்றும் படத்தின் நீளம் அதை சலிப்படைய செய்து விடுகிறது ,இந்தப் படத்திற்கு அறிவிப்பு நேரத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் இப்பொது இதற்கான எதிர்பார்ப்பு குறைவுதான் அதற்கு காரணம் ஜி வி தான்
மொத்தத்தில் இந்த ‘டியர்’ ஆண்களுக்கான குட் நைட்
நம்ம tamil prime news ரேட்டிங் 3.3/5