அரிமாபட்டி சக்திவேல் திரை விமர்சனம் !

அரிமாபட்டி சக்திவேல் திரை விமர்சனம் !

அரிமாபட்டி சக்திவேல்

இயக்குனர்- ரமேஷ் கந்தசாமி.
நடிகர்கள் – பவன் , மேக்னா எலன் , சார்லி
இசை – மணி அமுதவன்
தயாரிப்பு – அஜீஸ் , பவண்

open பண்ணா !!

ஒரு கிராம மக்கள் தங்களுக்கென்று சில வரைமுறைகளை விதித்து அதற்கு கட்டுபட்டு வாழ்ந்து வருகின்றனர் , அதன்படி அந்த ஊரில் யாரும் காதல் திருமணம் செய்யவோ அல்லது வேரு சாதியை சேர்ந்தவரையோ திருமணம் செய்ய அனுமதி இல்லை, அப்படி செய்பவர்களை அந்த ஊரை விட்டே ஒதுக்கி வைக்கும் வழக்கமும் வைத்துள்ளனர். இன்னிலையில் அந்த ஊரை சேர்ந்த இளைஞனாக கதாநாயகன் பவன் நடித்துள்ளார் , அதே சமயம் மற்றொரு ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் காதலிக்கிறார் , இந்த காதல் விஷயம் ஊருக்கு தெரிய வரும்போது என்ன நடக்கிறது , இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

இந்தப் படம் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது, இந்தப் படத்தில் நடித்துள்ள கதானாயகன் பவனின் சொந்த கிராமம் தான் அது, அவர் தன் வாழ்வில் அனுபவித்த கஷ்டங்களை அப்படியே இந்தப் படத்தில் நடித்துள்ளார், இன்றும் அந்த ஊர் மக்கள் இந்தக் கட்டுப்பாட்டில் இருப்பது தான் நிதர்சனமான உண்மை . அவர் தனது சொந்த வாழ்வில் மொத்த கிராமத்தையும் எதிர்த்து போராடியுள்ளார். அதை நடிப்பில் அப்படியே வெளி கொண்டு வந்துள்ளார். நாயகியாக நடித்திருக்கும் மேக்னா எலன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

Arimapatti Sakthivel Movie Review - Tamil News | Online Tamilnadu News |  Tamil Cinema News | Chennai News | Chennai Power shutdown Today | Chennai  Vision

இந்தப் படத்தில் நடிகர் சார்லி கதாநாயகனின் தந்தையாக நடித்திருக்கிறார், இந்தப் படத்தில் ஒரு அப்பாவி வெகுளி தந்தையாக நடித்திருக்கிறார், தனது மகன் ஏமாற்றியதால் படும் ஏமாற்றத்தையும் ஊர் மக்களிடம் படும் அவமானத்தையும் நம் கண் முன் கொண்டு வந்துள்ளார். நாயகனின் தாத்தாவாக நடித்த அழகு கதாபாத்திரம் நன்றாக இருந்தது, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, சேதுபதி ஜெயசந்திரன் என பெரிய நடிகர் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தனர் . அனைத்து கதாபாத்திரமும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். நடிகர்கள் தேர்வு இப்படத்திற்கு பெரிதும் உதவியுள்ளது அனைத்து கதாப்பாத்திரங்களும் சிறு நடிகர்கள் என்பதால் நமக்கு எளிதாக ஒப்பிட்டுக் கொள்ள முடிகிறது.

தனி ஒரு மனிதனின் வாழ்வில் பொது நலம் மற்றும் ஊரின் கட்டுபாடுகள் எத்தனை இடையூறுகள் செய்கின்றது மற்றும் அவரவர்களின் சொந்த வாழ்க்கையை கிராம மக்கள் முடிவு செய்வது போன்ற அநீதி இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இந்தப் படம் ஒரு எடுத்துக்காட்டு, ஒரு மனிதனுக்கு ஒழுக்கமும் நிபந்தனைகளும் முக்கியம் என்றாலும் அது மனிதனை மனிதனாக்க மட்டுமே பயன்படுத்தப் பட வேண்டும் , சாதி மற்றும் மதத்தினால் கிடைக்கும் மதிப்பில்லாத வரட்டு கௌரவம் சாதரண மனிதனின் மனதை எந்த அளவிற்கு நோகடிக்கிறது என்பதை கதானாயகன் வழியாக நமக்கு எடுத்துறைத்துள்ளனர்.

Arimapatti Sakthivel Review: A Film On Casteism That Fails To Impress |  Tamil News, Times Now

இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் ஜெ.பி.மேனின் இயல்பான ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. கொஞ்சம் கவனம் குறைவாக இருந்தாலும் கதைக்கு தேவையானவற்றை கொடுத்துள்ளார்.
முக்கியமாக பாடல் காட்சிகளை வித்தியாசமாக எடுத்துள்ளனர், காதல் பாடலை ஒரே அறையில் மிக நேர்த்தியாக படமாக்கி கவனம் ஈர்க்கிறார். மணி அமுதவன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.

இயக்குநர் ரமேஷ் கந்தசாமி அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மனிதர்களுக்கு அறிவுரை வழங்க காதலை பயன்படுத்தியிருக்கிறார். இந்த கால கட்டத்திலும் இப்படிப்பட்ட மக்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு இப்படம் ஒரு சான்று .

மொத்தத்தில், இந்த ‘அரிமாபட்டி சக்திவேல்’ கிராமக்கட்டுப்பாடுகளை தகர்த்துள்ளது .

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.1/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *