படம் வெளியாகும்போது அவ்வளவு அழுத்தங்கள் இருந்தது ‘மிஷன் சாப்டர்1’ பட நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் அருண் விஜய்!

படம் வெளியாகும்போது அவ்வளவு அழுத்தங்கள் இருந்தது ‘மிஷன் சாப்டர்1’ பட நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் அருண் விஜய்!

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இதன் தேங்க்ஸ் கிவ்விங் மீட் நடைபெற்றது.

 

நடிகர் அருண் விஜய் பேசியதாவது,

“நல்ல கதையுள்ள படங்களை மக்களும் மீடியாவும் எப்போதும் கைவிட்டதே இல்லை. அதற்காக நன்றி சொல்லும் சந்திப்புதான் இது. ஒவ்வொரு படத்திலும் எனக்கு எதாவது ஒரு பிரச்சினை இருக்கும். இந்தப் படத்திலும் உடல் ரீதியாக நிறைய சவால்கள் இருந்தது. புதுச்சேரி, மதுரை என நாங்கள் போன இடங்களில் எல்லாம் குடும்பத்தோடு பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடினார்கள். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இதற்கு நான் விஜய் சாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். இப்படி ஒரு அழகான கதையில் என் பலத்தை அவர் சரியாக உபயோகப்படுத்தியுள்ளார். வரும் வாரத்தில் இந்தப் படத்திற்கு இன்னும் அதிக ஸ்கிரீன் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். படத்திற்கு ஆரம்பத்தில் அதிக பிரச்சினை இருந்தது. ஒரு படத்தை வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதைச் சிறப்பாக செய்திருக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சாருக்கும், தமிழ்க்குமரன் சாருக்கும் நன்றி. 25 கோடி போட்டிருக்கும் இந்த புராஜெக்ட் மீது நம்பிக்கை வைத்த எங்கள் தயாரிப்பாளர்கள் வம்சி, ராஜசேகர் சாருக்கும் நன்றி. படம் வெளியாகும்போது அவ்வளவு அழுத்தங்கள் இருந்தது. அவை அனைத்தையும் எங்களுக்குத் தராமல் இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த வெற்றி அவர்களைத்தான் சாரும். நீங்கள் தரும் ஆதரவுதான் என்னை புதுப்புது கதைகள் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறது. உங்களை கதையுடன் கனெக்ட் செய்யும் படங்களைத்தான் இனி தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் இந்தப் படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி. வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ். வரும் நாட்களில் உங்கள் நேரத்திற்கு ஏற்றாற் போல, நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம். நன்றி”.

இயக்குநர் விஜய், “எங்கள் எல்லோருக்கும் சிறப்பான வருடம் இது. இந்த தேங்க்ஸ் மீட் எதற்கு என்று முதலில் சொல்லி விடுகிறேன். படம் வெளியாகும்போது எங்களுக்குத் திரையரங்குகள் குறைவாகவே கிடைத்தது. இரண்டு பெரிய படங்கள் வருகிறது எனும்போது எங்களுக்கு அப்படி அமைந்து விட்டது. எங்கோ பிரிவியூ ஷோ போவது போலதான் இருந்தது. திரையரங்குகளில் படம் வெளியான ஒரு ஃபீல் கிடைக்கவே இல்லை. ஆனால், படத்தில் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. ஜிவி பிரகாஷின் இசை படத்திற்குப் பெரிய பலம். அருண் விஜய் சார், இயல், அபிஹாசன், ஏமி, நிமிஷா, பரத், சரவணன், ராமலிங்கம் மேஸ்திரி என அனைவருக்கும் நன்றி. படம் இன்று இவ்வளவு பெரிதாகத் தெரிய இவர்கள் தான் காரணம். படத்தில் முக்கியமான விஷயம் கதைதான். அதைக் கொடுத்த மகாதேவன் சாருக்கு நன்றி. படத்தில் மொட்டை மாடியில் இருந்து அருண் விஜய் சார் குதிக்கும் காட்சி ஒன்று வரும். அது சிஜி கிடையாது. டூப் போடாமல் அவரே செய்தார். அது மேஜிக் போல நடந்துவிட்டது. அந்தத் தருணங்களில் எங்களுக்கு பாதுகாப்பைச் சரியாக செய்து தந்த செல்வா மாஸ்டருக்கு நன்றி. பார்வையாளர்களுக்கும் மீடியாவுக்கும் மீண்டும் நன்றி!”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *