விஜய் ஆண்டனி கலந்து கொண்ட விமலின் படவா பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

விஜய் ஆண்டனி கலந்து கொண்ட விமலின் படவா பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

 

ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா’ திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர். இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்’ புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.கே.வி. நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார். கலை இயக்குந‌ராக சரவண அபிராமன், படத்தொகுப்பாளராக வினோத் கண்ணா பொறுப்பேற்றுள்ளனர்.சண்டைக்காட்சிகளை சிறுத்தை கணேஷ், நடனத்தை தினேஷ், ஸ்ரீதர் மற்றும் தினா ஆகியோரும் வடிவமைத்துள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்து வருகிறார். பாடல்களை ஜான் பீட்டர், விவேகா, கபிலன் வைரமுத்து, இளையகம்பன், ஸ்வர்ணலதா ஆகியோர் எழுதியுள்ளனர். ‘படவா’ படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில்

இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஜான் பீட்டர் பேசியதாவது…

அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்தப் படத்தில் சூரி சார் பெரிய கேரக்டர் செய்துள்ளார். அவர் சார்பாகவும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. அனைவரையும் வாழ்த்த வரவேற்கிறேன்.

கதாநாயகி ஸ்ரீதா பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம்,. மேடையில் உள்ள அனைவருக்கும் நன்றி. இயக்குந‌ர் நந்தா அவர்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எனக்கு சுத்தமாக‌ தமிழ் தெரியாது. அவரால் தான் நான் தமிழ் வசனம் பேசி கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். அனைவருக்கும் நன்றி .

கதாநாயகன் விமல் பேசியதாவது…

மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தின் இயக்குந‌ர் நந்தா அவர்களுக்கும் நன்றி. அன்பு நண்பன் சூரி அவர்களுக்கும், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்களுக்கும் நன்றி.

விஜய் ஆண்டனி பேசியதாவது…

ஜான் பீட்டர் மற்றும் கதாநாயகன் விமல் அவர்களுக்கு வணக்கம். கண்டிப்பாக நீங்கள் பெரிய உயரத்தை தொடுவீர்கள். கதாநாயகன் விமல் நடிகர் சூரி சார் காம்போ நன்றாக இருக்கும். இது நல்ல திரைப்படமாக கட்டாயம் அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *