எறும்பு திரைவிமர்சனம்
எறும்பு….திரை விமர்சனம்
சுரேஷ் குணசேகரன் தயாரிப்பில் சுரேஷ்.G அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் “எறும்பு”..
இப்போ கதை என்ன என்று பார்போம்…!
கிராமத்தில் வாழ்ந்து வரும் நடுத்தர குடும்ப தலைவன் சார்லி அவர் முதல் மனைவி ரெண்டு குழந்தைகளை பெற்று இறந்துவிட..!
சார்லி ரெண்டாம் தாரமாக சூசன் அவர்களோடு தன் அம்மா குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார்..சார்லி மூத்த மகள் பச்சையம்மா புத்திசாலி பொண்ணு தன் தம்பி முத்துவுக்கு அக்கா மேல அளவு கடந்த பாசம்.. சார்லி குடும்ப செலவுக்கு கரும்பு வெட்டி பிழைக்கிரார்..
அப்படி அவர் அடாவடி வட்டிகாரர் MS பாஸ்கர் கிட்ட வாங்கிய கடனை அடைக்க இயலாமல் அசிங்க பட்டு நிற்கிறார்…
கெடு கொடுத்த நாளுக்குள் வட்டியும் முதலும் தந்து விடுகிறேன் என்று சொல்ல…அதை நோக்கி அழகாக கதையை நகர்துகிறார் இயக்குனர்..
முத்து சித்தி யின் தம்பி கொடுத்த மோதிரம் vettu முடிந்து வரும்வரை பாட்டி அணிவித்து மகிழ..சிறுவன் தொலைத்து விடுகிறான்… அக்கா விடம் சொல்லி கதற .. தாயுள்ளதோடு தம்பியை சித்தியிடம் இருந்து காப்பாற்ற அக்காவும் தம்பியும் ஜார்ஜ் என்கிற சிட்டு கேரக்டர அணுகி உதவி கேட்க கதை நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமாக நகர்கிறது…
சார்லியுடன் கரும்பு வெட்டுக்கு சென்ற சித்தி வருவதற்குள் பணம் சேர்த்து மோதிரம் வாங்கி விட துடிப்பதில் நாமும் துடிக்கிறோம்…!
குறிப்பாக சிட்டுவின் phone வாங்கி இறந்த அம்மாவிடம் அந்த அக்கா குழந்தை மா என்று கதறும் இடம் கல் நெஞ்சை கூட கலங்க வைக்கும் காட்சி அமைப்பு….!
சார்லி மனைவி சித்தி சூசன் சற்று வில்ல தனமாக இருந்தாலும் அந்த கல்லுகுள்ளும் ஈரம் உண்டு என்று சொன்ன இடம் wow…கடைசியில் வட்டி காசை சார்லி கொடுத்தாரா..?சித்தியின் மோதிரம் என்ன ஆச்சு..குழந்தைக நிலைமை என்ன..??
இயக்குனர் சுரேஷ்.G மற்றும் அவர் படகுழுவினர்கள் எறும்பை யானையாக்கி உள்ளனர்…
HATS OFF எறும்பு TEAM