காஷ்மீரில் நிலநடுக்கம்- லியோ படக்குழுவிற்கு என்ன ஆனது!
இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை கண்டு அதிர்ந்த அப்பகுதி மக்கள், வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.6 ரிக்டர் என தகவல்கள் சொல்லுகின்றன இந்த நிலநடுக்கமானது டெல்லி, பஞ்சாப் மற்றும் வடமாநிலங்களின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் ‘லியோ’ படக்குழு அங்கு தங்களின் தற்போதைய நிலை குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறது.
இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சந்திரமுகி படத்தில் பங்களாவிற்குள் செல்லும் வடிவேலு பயந்து நடுங்கும் வீடியோவை பகிர்ந்து ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா’ என்று பதிவிட்டு இருக்கிறது.
கடந்த மார்ச் 21 ஆம் தேதி நிலநடுக்கம் வந்த உடனேயே லியோ படத்தின் ஷூட்டிங் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் காலதாமதம் செய்யாமல் காஷ்மீர் படப்பிடிப்பை இன்னும் ஒரு வாரத்தில் முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது