தளபதி 67-ல் இருந்து விலகிய மிஷ்கின்

தளபதி 67-ல் இருந்து விலகிய மிஷ்கின்

தளபதி 67 படத்தில் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்திகள் வைரலாகி வந்த நிலையில், தற்போது மிஷ்கின் அடுத்த படம் பற்றிய புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, மிஷ்கின் இப்போதைக்கு தளபதி 67-ல் விஜய்க்கு வில்லனாக நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதற்கு காரணம் மிஷ்கின் இயக்கி இருக்கும் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். அப்போது விஜய் சேதுபதிக்கு மிஷ்கின் ஒரு கதை கூறி இருக்கிறார். இப்போது அந்தப் படத்தை தொடங்கலாம் என மிஷ்கினுக்கு விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அதனால் உடனடியாக விஜய் சேதுபதியிடம் கூறிய கதையை முழுமையாக தயார் செய்து வருகிறார் மிஷ்கின்.

விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு அவரது வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கான ப்ரீ புரோடக்‌ஷன் பணிகள் ஜனவரியில் இருந்து தொடங்கவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் தளபதி 67-ல் மிஷ்கின் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *