நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோவை கைபற்றிய ஓடிடி!

நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோவை கைபற்றிய ஓடிடி!

நடிகை ஹன்சிகாவுக்கு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற போகிறது. நடிகை ஹன்சிகா, சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர்.

இவர்களது திருமண டாக்குமென்ட்ரியை ஒளிபரப்பும் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹன்சிகாவின் திருமணம் ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று நடிகை நயன்தாராவின் திருமணத்தை வீடியோ ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தார்கள். கூடிய விரைவில் இந்த டாக்குமென்ட்ரி , நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இன்னும் வெளியீட்டு தேதியை நெட்பிளிக்ஸ் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *