எனிமி ஆப் தி ஸ்மக்லர் திரைவிமர்சனம் ரேட்டிங் 4.1/5

எனிமி ஆப் தி ஸ்மக்லர்
நடிப்பு: ஜேடி சக்கரவர்த்தி, லால், ராதிகா, சரண் சக்தி, பாலசரவணன், சிமேஹா,, காளி வெங்கட், ஜாபர் சாதிக், மைம் கோபி,
சமய முரளி தயாரிப்பு: எஸ் ஆர் ட்ரீம் ஸ்டுடியோ இசை: சமய முரளி ஒளிப்பதிவு: க வின் பாஸ்கர்
இயக்கம்: டி சமய முரளி பிஆர்ஓ : நிகில் முருகன்

கதை ஓபன் பண்ணா….!
தன் அப்பாவை இழந்த சரண் தாய் ராதிகாவுடன் வசித்து வருகிறார்..அப்பாவுடன் பிறந்த அண்ணன் வீட்டை காலி பண்ண சொல்கிறார்…. ஏற்கனவே குடும்பத்தில் கடன் பிரச்சினை அதிகமாக இருப்பதால் குறுக்குவழியில் அதிக பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.. இவருக்கு துணையாக இருக்கிறார் போலீஸ் இன்பார்மர் பால சரவணன்..வெளிநாட்டிலிருந்து கப்பல் வழியாக ரகசியமாக வரும் தங்க கட்டிகள் மற்றும் போதை மருந்துகளை கடத்தல் தலைவன் லிங்கம் ( ஜேடி சக்கரவர்த்தி ) லாவகமாக கடத்தி சேர வேண்டிய நபருக்கு சேர்த்து விடுகிறார்.
இந்த தொழிலில் உலக அளவில் கொடிகட்டி பறக்கும் லால் மற்றும் ஜே.டி. சக்கரவர்த்தி கிட்ட வறுமையில் இருக்கும் இளைஞன் அமர் (சரண்) வேலைக்கு சேர்ந்து குறுக்கு வழியில் சம்பாதித்து பணக்காரனாக திட்டமிடுகிறான் லிங்காவிடம் கடத்தல் வேலையில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க தொடங்குகிறான்.இதற்கிடையே இவருக்கு ஒரு காதல் திருமணம் ..பெண்ணின்அண்ணன் ஒரு மிடில் க்ளாஸ் நபர்… தங்கை தன் பேச்சை கேட்காமல் காதல் திருமணம் செய்த வருத்தத்தில் இருக்கிறார்.கடத்தல் மூலம் வரும் கமிஷன் பணத்தில் வீட்டை மீட்டு அம்மாவிடம் ஒப்படைக்கிறார்


தங்கம் மற்றும் போதை பொருட்களை கடத்தி லிங்கத்திடம் நல்ல பெயரை சம்பாதிக்கும் சரண் , பாலா சரவணன் இருவருக்கும் ஒரு பெரிய கொள்ளைக்கு திட்டமிட வாய்ப்பு வருகிறது … லால் துபாயில் இருந்துகொண்டு தமிழ்நாட்டில் உள்ள ஜெ.டி.சக்ரவர்த்திக்கு 25 ஆயிரம் கோடி மதிப்பு உள்ள போதை பொருளை குஜராத் போர்ட் மூலம் கப்பலில் அனுப்பி வைக்கிறார்.
ஜெ.டி.சக்ரவர்த்தியிடம் வேலைபார்க்கும் சரண் சக்தியும், பாலசரவணனும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் பல போலியான தஸ்தாவேஸ்கள் தயார் செய்து அந்த 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள உயர்ரக போதைப் பொருள் உள்ள கண்டெய்னரை மிக எளிதாக துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு வருகிறார்கள்.
வெளியே வந்த கண்டெய்னரை பாதிவழியில் சுங்கத்துறை ஆணையர் சமயமுரளி மடக்கி பிடித்து விடுகிறார். இந்த செய்தியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறார்கள். அந்த செய்தியில் 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதை பொருள் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மீதமுள்ள 20 ஆயிரம் கோடி போதைப் பொருள் எங்கே?

லால் அந்த மீதி கடத்தல் பொருளை லிங்கம் திருடி விட்டதாக சந்தேகப்பட லிங்கமும் தன்னிடம் வேலை பார்க்கும் சரண் மற்றும் பால சரவணன் இவர்கள் திருடி விட்டதாக அவர்களை தேடுகிறார் இதய அறிந்த சரண், பால சரவணன் அவர்களிடமிருந்து தப்பிக்க முயல ,திரைக்கதை பரபரக்கிறது ஐந்தாயிரம் கோடி சரக்கு மட்டுமே பிடிபட்டுள்ளதால் மீதி உள்ள சரக்கு எங்கே போனது என்பதை கஸ்டம்ஸ் அதிகாரி ஒரு பக்கம் இவர்களை தேட , லால் ஒரு பக்கம், லிங்கம் மறுபக்கம் இவர்களுக்கிடையே தப்பித்து ஓடும் சரண் மற்றும் பால சரவணன் ஒரு பக்கம் இப்படியாக திரைக்கதை அதிரடி கிளைமாக்ஸ் நோக்கி செல்கிறது …!என்ன நடந்தது என்பதை அட்டகாசமான டிவிஸ்ட் வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் சமயமுரளி
பலத்த பாதுகாப்பு நிறைந்த துறைமுகங்களில் உள்ள அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு அங்குள்ள போதை மருந்து ட்ரக்குகளை சரண் , பால சரவணன் இணைந்து சாதுர்யமாக கடத்துவது விறுவிறுப்பு. பெண் அதிகாரியை நொடிப்பொழுதில் பால சரவணன் ஏமாற்றி டிரக்குகளுக்கு கிளியரன்ஸ் தருவதெல்லாம் திக்திக் என நகர்கிறது.

ஹார்பரில் கண்டெய்னர்ல இருந்து பொருட்களை இறக்குவது ஏற்றுவது கிளியரன்ஸ் வெளியே கொண்டு வருவதில் உள்ள சிக்கல்கள் இவற்றைப் பற்றி நன்கு அறிந்த இயக்குனர் இவர் என்பதால் இவர் அதிகாரியாகவும் இருந்த காரணத்தினால் ரொம்ப டீடைலிங் ஆக இந்த படத்தை இயக்கியுள்ளார். இது இந்த பட வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது …திரைக்கதைக்கு இவரின் அனுபவம் முக்கிய பங்காற்றி உள்ளது
இயக்குனர் சமய முரளி அவர்களுக்கும் அவரது டீமுக்கும் வாழ்த்துக்கள்
நம்ம தமிழ் பிரைம் நியூஸ் ரேட்டிங் 4.1 /5



