மணிரத்னம் திரைப்பட நாயகியுடன் சித்தார்த் காதல்!!!!
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் சித்தார்த்.
சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்து பேசி ரசிகர்களிடம் விவாதத்தை உருவாக்கும் படி பல நேரங்களில் சித்தார்த் உடைய செயல்கள் இருந்து இருக்கிறது. ஆனால் சில நாட்களாக சித்தார்த் எந்த கருத்துக்களையும் தெரிவிக்காமல் இருந்தார்.
ஆனாலும் சித்தார்த் பற்றிய கிசுகிசுகள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. கடந்த சில மாசங்களாகவே நடிகை அதிதி ராவும், சித்தார்த்தும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. அதற்கு ஏற்ற போல் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பல இடங்களில் சுற்றி திரிந்த போட்டோக்களும் வைரலாகியது.
அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் பட ட்ரெய்லர் விழாவில் கூட இவர்கள் இருவரும் ஜோடியாக வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது இருந்தே இவர்களுடைய காதல் பற்றி திரையுலகில் பேசப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட இவர்கள் இருவரும் அதைப்பற்றி எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை.
இந்நிலையில் சித்தார்த் அதிதி ராவின் பிறந்தநாளை முன்னிட்டு போட்ட பதிவு, காதலை உறுதிபடுத்தவதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அவர் எனது இதய ராஜகுமாரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு தாங்கள் ஜோடியாக இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்திருக்கிறார். இதன் மூலம் அவர்கள் இருவரின் காதலும் தற்போது உறுதியாகி இருக்கிறது.
இதை அடுத்து இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டும் இன்றி விரைவில் திருமண தேதியையும் கூறுங்கள் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.