இணைய போகும் தளபதி விஜய்- மிஷ்கின் கூட்டணி
‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்திற்கான அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்தாலும், அவர் மீண்டும் விஜயை தான் இயக்குகிறார் என்ற தகவல் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘தளபதி 67’ ல் இந்த கூட்டணி மீண்டும் இணையப் போகிறது.
‘மாஸ்டர்’ படத்தில் விமர்சனரீதியாக எழுந்த சர்ச்சைகளை சரிகட்ட போவதாகவும், இந்தப்படம் ழுழுக்க என்னுடைய பாணியில் இருக்க போவதாகவும் லோகேஷ் பேட்டிகளில் குறிப்பிடுகிறார். மேலும் இந்தப்படத்தில் விஜய் நாற்பது வயது மதிக்கதக்க கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்தப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணியில் லோகேஷ் பிசியாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் படி இந்தப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல இயக்குனர் மிஷ்கின் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்தப்படத்தில் கெளதம் மேனன் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.
தளபதி விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இயக்குனர் மிஷ்கின் தான். அவர் பிசாசு 2 இயக்குவதில் பிசியானதால், பீஸ்ட் படத்தில் நடிக்க முடியவில்லை. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.
மிஷ்கின் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
மேலும் ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள ‘பிசாசு 2’ படமும் விரைவில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.