பராசக்தி திரைவிமர்சனம் ரேட்டிங் 4.3/5 ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காவியம் ..!

பராசக்தி திரைவிமர்சனம் ரேட்டிங் 4.3/5 ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காவியம் ..!

பராசக்தி

நடிப்பு: சிவகார்த்திகேயன், ரவிமோகன்,அதர்வா, ஸ்ரீ லீலா, குலப்பள்ளி லீலா, குரு சோமசுந்தரம், சேத்தன், ராணா டகுபதி, காளி வெங்கட் மற்றும் பலர்

தயாரிப்பு: டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன்   அர்சுன் நடேசன், மதன் கார்க்கி, ஷான் கருப்பசாமி  இசை: ஜி வி. பிரகாஷ்   ஒளிப்பதிவு: ரவி கே சந்திரன்

இயக்கம்: சுதாகொங்கரா    ரிலீஸ்:  ரெட் ஜெயன்ட் மூவிஸ்  இன்பன்உதயநிதி    பிஆர்ஓ: சதீஷ் ( AIM), சிவா

கதை open பண்ணா ….!

நாயகன் (செழியன்)சிவகார்த்திகேயன் புறநானூறு என்ற பெயரில் மாணவர் புரட்சி படை நடத்தி வருகிறார் .சிவகார்த்திகேயன் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்த சட்டக்கல்லூரி மாணவன் சிவகார்த்திகேயன் புறநானூற்றுப்படை என்ற அமைப்பை உருவாக்கி இந்தி திணிப்புக்கு எதிராக போராடி வருகிறார். அந்த போராட்டத்தின் முதல்கட்டமாக மதுரைக்கு வரும்   ரயில் தீ வைத்து கொளுத்த சிவகார்த்திகேயன் சகமாணவப்படைகளுன் வந்து  ரயில் பயணிகளை கீழே இறக்கி விடுகிறார். அதே நேரத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் மாணவர்களை சிறைபிடிக்க டில்லியிலிருந்து காலால் ராணுவப்படை தளபதி ரவிமோகன்  ரயில் வண்டிக்குள் வருகிறார்.   ரயில் வண்டிக்குள் சிவகார்த்திகேயனுக்கும் ரவி மோகனுக்கும் பலமான சண்டை நடக்கிறது. இந்த சண்டையில்  கைவிரல்  முறிவு காயத்துடன் தப்பிக்கிறார் ரவி மோகன். திட்டமிட்டபடி !ரயிலை தீக்கிரையாக்குகிறார் சிவகார்த்திகேயன்.

ஆனால் அந்த   ரயில்  வந்த சிவகார்த்திகேயனின் நண்பரும் தீயில் சிக்கி மரணமடைகிறார். இதை அறிந்த சிவகார்த்திகேயன் இனி போராட்டம் வேண்டாம் என்று கூறி தனது புறநானூற்றுப்படையை கலைத்துவிட்டு ரயில் இன்ஜினில் கரி அள்ளி போடும் வேலையில் சேர்கிறார்..  ,அதே நேரத்தில் சிவகார்த்திகேயனின் தம்பி அதர்வா முரளி அண்ணன் கைவிட்ட இந்தி திணிப்பு போராட்டத்தை அண்ணனுக்கு தெரியாமல் தன்கையிலெடுத்து போராடி வருகிறார்…! சிவா.கரி அள்ளும் வேலையை விட்டு ரெயில்வேயில் TTR வேலைக்கு சேர முயற்சிக்கிறார் ..அதற்காக காங்கிரஸ் MP மகள்ஸ்ரீலீலா விடம் ஹிந்தி கற்றுக்கொள்கிறார்.. இந்தி படித்து வேலைக்குச் செல்ல முயற்சிக்கிறார்..

இந்நிலையில் இந்தியை ஏற்காத மாநிலங்களில் இரு மொழி கொள்கை தொடரும் என்று நேருவின் ஒன்றிய அரசு அறிவிக்கிறது. அதன் பிறகு சில காலம் ஓய்ந்திருந்த இந்த பிரச்சனை மீண்டும் இந்தி திணிப்பை காங்கிரஸ் ஒன்றிய அரசு கையில் எடுக்கும் போது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டக் களத்தில் குதிக்கின்றனர்.ஒரு கட்டத்தில் தம்பி அதர்வா அவன் கூட்டாளிகள் போராட்டம் நடத்த திட்டமிடுவதை நேரில் பார்த்த   சிவா அவர்களை கண்டிக்கிறார் அந்த போராட்டத்தை அடக்க அதிகாரி  ரவிமோகன்  துணை ராணுவ படையையே அழைத்து வருகிறார்.மதுரையில் நடக்கும் ஒரு விழாவில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் சூழலில், கருப்புக் கொடி காட்டுவது என்ற முயற்சியை அதர்வா தலைமையிலான குழுவினர் திட்டமிடுகிறார்கள். அதே வேளையில் இந்தி தெரியாத காரணத்தால் மத்திய அரசின் வேலை பறிபோக, அதிர்ச்சியில் சிவகார்த்திகேயனும் அங்கு வந்து சேர்கிறார். போராட்டத்தை தடுத்து நிறுத்த ரவி மோகனும் அங்கு விரைகிறார்.

போராட்டத்தை கைவிட்ட சிவா மீண்டும் ஏன் போராளியானார் …? போராளி அதர்வா முரளி என்ன ஆனார்? அவருக்கு என்ன நடந்தது…?    இந்தி படித்த சிவகார்த்திகேயனுக்கு நேர்முக தேர்வில் ஹிந்தியில் கேட்ட கேள்விகள் சிவாவின் பதிலில் சிறிய தவறும், சிவா சிந்திக்க வைக்கும் பதில்கள் சொன்னாலும் கேட்கா அப்போதைய ஒன்றிய அரசு ஏன் வேலை கொடுக்க மறுக்கிறது? தன் கைவிரலை துண்டித்த தமிழனை கொன்றே தீருவேன் என்று சபதமெடுத்த ரவி மோகன் தனது சபதத்தை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதை சொல்லும் ஒரு பழி வாங்கும் கதையோடு கலந்த ஹிந்தி எதிர்ப்பு மாணவர் போராட்ட களமும் தான் இப்படத்தின் கதை….முதல் போராட்டத்தில் தனது நண்பன் இறந்த பிறகு போராட்ட குணத்தை கைவிட்டு அமைதியாகி வேலைக்கு செல்வதும், அப்போதும் இந்தி திணிப்பால் தனக்கு வர வேண்டிய வேலை கிடைக்காமல் போனதும் மீண்டும் ஒரு புரட்சிக்கு பொங்கி எழும்போது அரங்கை அனலில் கொப்பளிக்க வைக்கிறார்சிவகார்த்திகேயன்..!

இதுவரை கதாநாயகனாக அறியப்பட்ட ரவி மோகன், இப்படத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு வில்லத்தனத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார் ரவி மோகன்….கதாநாயகி ஶ்ரீலீலா படத்தின் முதல்பாதியில் காதலுக்கு மட்டுமே பயன்பட்டிருந்தாலும் உச்சக்கட்ட காட்சியின் திருப்புமுனைக்கு அவரே காரணமாகியிருந்து பார்வையாளர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.படத்தில் இடம்பெறும் அர்த்தமுள்ள வசனங்களை சுதா கொங்கரா, அர்சுன் நடேசன், மதன் கார்க்கி, ஷான் கருப்பசாமி எழுதி உள்ளனர்.இந்தியா, காங்கிரஸ்காரனிடமிருந்து மொழிச் சுதந்திரம் பெற்ற வரலாறை இக்கால்த்து மாணவர்களுக்கு ஒரு பாடமாக அமைத்துக் திரையில் காட்டியிருக்கும் இயகுநர் சுதா கொங்கராவுக்கு வாழ்த்துக்கள் ..

அந்த கால கட்டத்தை கண் முன்னே கொண்டு வந்து தமிழ் மொழி தீ பரவ விட்ட பட குழுவினருக்கு பாராட்டுக்கள் ..!ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காவியம் ..!

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 4.3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *