கொம்பு சீவி திரை விமர்சனம் ரேட்டிங் 3.8/5

கொம்பு சீவி திரை விமர்சனம் ரேட்டிங் 3.8/5

கொம்பு சீவி

நடிப்பு: சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட், முனீஸ் காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா

தயாரிப்பு :முகேஷ்.T.செல்லையா  இசை: யுவன் சங்கர் ராஜா   ஒளிப்பதிவு: பால சுப்பிரமணியம்  இயக்கம்: பொன் ராம்   பிஆர்ஓ: நிகில் முருகன்

கதை ஓபன் பண்ணா…!

மதுரை மாவட்டத்தில் வைகை அணை கட்டும்போது அங்கிருந்த பல கிராமங்கள் அழிந்தன. அங்கு வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். நிலம்  மற்றும் உடமைகளை இழந்த அப்பகுதி மக்கள் அணையில் நீர் வற்றினால் விவசாயம் செய்து பிழைக்கிறார்கள், நீர் நிரம்பினால் கஞ்சா போன்ற போதை வஸ்து தயாரித்து விற்று அதில் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஊர் மக்களுக்கு பிரச்சனை என்றால் அவர்களைக் காப்பாற்றும் இடத்தில் ரொக்க புலி (சரத்குமார்) இருக்கிறார். தாய் இறந்ததால் உறவுகளால் கைவிடப்பட்ட பாண்டியனை (சண்முக பாண்டியன்) தன் வீட்டில் வைத்து வளர்க்கிறார் ரொக்கப் புலி. மாமன் மச்சானாக இருவரும் பழகுகின்றனர். கஞ்சா கடத்தும் இவர்கள் அடிக்கடி போலீசில் சிக்குகின்றனர்..  அவருக்கு பக்கபலமாக சண்முகப்பாண்டியனும் போக்கிரியாக வளர்ந்து வாலிப வயதை அடைகிறார். இருவரும் கஞ்சா செடி வளர்த்து அதை விற்று ஊர்மக்களுக்களின் வாழ்வாதாரத்துக்கு பாடுபடுகிறார்கள். அவ்வூரிலுள்ள காவல்நிலையத்தில் காவலாளிகளாக காளிவெங்கட்டும் ஜார்ஜ் மரியானும் இருக்கிறார்கள். அந்த காவல்நிலையத்திற்கு. புதிய காவல்த்துறை ஆய்வாளாராக தர்னிகா பொறுப்பேற்கிறார். அவர்மீது சண்முகப்பாண்டியன் காதல் வசப்படுகிறார். ஆனால் கஞ்சா விற்கும் சண்முகப்பாண்டியனை கைதுசெய்து சிறையில் வைக்கிறார் தர்னிகா.

இதைக் கேள்விபட்ட சரத்குமார் காவல்நிலையத்துக்கு தீ வைத்துவிட்டு சண்முகப்பாண்டியனை சிறையிலிருந்து விடுவிக்கிறார். இதைக் கேள்விப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் சங்கர், சரத்குமாரையும் சண்முகப்பாண்டியனையும் அடித்து அவமானப்படுத்துகிறார். அந்த அவமானத்துக்கு கண்காணிப்பாளரை எப்படி பழிதீர்த்தார்கள்? ஆய்வாளர் தர்னிகாவின்மீது காதல்வசப்பட்ட சண்முகப்பாண்டியன் அவரை திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதை ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி ஆக்ரோஷ்மாகவும் நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். படத்தின் முதல் பாதி நகைச்சுவையுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம்பாதி ஆக்ரோஷமான கதைக்களத்துடன் முடிவடைகிறது. சரத்குமார் வயதுக்கேற்ற நடிப்பை பிரதிபலித்திருக்கிறார். வீராப்பாக பேசிவிட்டு வெள்ளைவேட்டியை உருவி காவல்த்துறைக்கு சமாதானக் கொடி அசைக்கும் காட்சியில் சிரிக்க மறந்தவன்கூட சிரித்துவிடுவான். படம் முழுக்க அட்டகாசம் செய்திருக்கிறார் சரத்குமார். இதுவரைபார்த்த சரத்குமாரை வேரொரு கோணத்தில் இப்படத்தில் பார்த்து ரசிக்கலாம். சண்முகப்பாண்டியனுக்கு நகைச்சுவை காட்சிகள் கைகொடுக்கவில்லை என்றாலும் அதிரடிக்காட்சிகளில் அப்படியே அவரது தந்தை விஜய்காந்தை நினைவுபடுத்துகிறார். உச்சக்கட்ட காட்சியில் பார்வையாளர்களை தனது துள்ளலான நடிப்பால் கட்டிப்போட்டுவிட்டார்.

 இப்படத்தின. மூலமாக இயக்குநர் பொன்ராம் சண்முகப்பாண்டியனை நட்சத்திர நடிகராக மாற்றியிருக்கிறார்.இயக்குனர் பொன்ராம் உண்மை கதையை எடுத்து திரைக்கதையை சூப்பராக அமைத்திருக்கிறார், முதல் பாதி அசத்தலான சண்டை காட்சிகளுடன் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கிறது. இரண்டாம் பாதியில், எமோஷனல் ,மற்றும் காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கிறது . படத்தில் வரும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருப்பதால் படம் போரடிக்காமல் செல்கிறது. சண்முக பாண்டியன், சரத்குமார் இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.. ஆய்வாளர் வேடத்தில்வரும் தர்னிகா, சண்முகப்பாண்டியன்மீதுள்ள காதலை காக்கிச்சட்டைக்குள் மறைத்துவைத்து அவ்வப்போது வெளிப்படுத்தும் அவரின் உடல்மொழி ரசிக்க வைக்கிறது.  காளிவெங்கட், ஜார்ஜ் மரியான், முனிஷ்காந்த் இம்மூவரும் தங்களது அனுப்பவ நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்கள். இப்படத்திற்கு மிகவும் பக்கபலமாக யுவன்சங்கர்ராஜாவின் இசை அமைந்திருக்கிறது. கிராமத்துப்பாடல்கள் தாளம்போட வைத்திருக்கிறது.   கொம்புசீவி விட்ட காளையாக சண்முகப்பாண்டியன்  சீறிப்பாயும் படம்…! இந்த கொம்பு சீவி திரை படம்”சண்முக பாண்டியனுக்கு ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கிறது…கொம்பு சீவி படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் …!

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.8/5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *