சாவீ திரை விமர்சனம் ரேட்டிங் 2.9/5

 சாவீ திரை விமர்சனம் ரேட்டிங் 2.9/5

 சாவீ

நடிப்பு: உதயா தீபா, ஆதேஷ் பாலா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே சேஷாத்திரி  தயாரிப்பு:  ஆண்டன்  அஜித் புரடக்சன்

இசை: சரண் ராகவன், வி ஜே ரகுராம்  ஒளிப்பதிவு: பூபதி வெங்கடாசலம்  இயக்கம்: ஆண்டன் அஜித்   பிஆர்ஓ: ஆர்.மணி மதன்

கதை ஓபன் பண்ணா…!

கதாநாயகன் உதய தீபாவுக்கு இரண்டு தாய்மான்கள் இருக்கிறார்கள். தனது தந்தையின் மரணத்துக்கு இந்த தாய் மாமன்கள்தான் காரணம் என்று நினைத்து மிகுந்த கோபத்தில் இருக்கிறார் உதய் தீபா. அதே நேரத்தில் தனது மற்றொரு மாமன் மகளான கவிதாவை காதலிக்கிறார். கதாநாயகன் உதய் கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளவர். ஒருநாள் சாலை விபத்தில் கவிதாவின் அப்பா மரணமடைந்து விடுகிறார். விரோதியாக இருந்தாலும் தாய் மாமன் என்ற உறவுக்காகவும் காதலி கவிதாவின் தந்தை என்றதாலும் தன் அம்மாவுடன் சாவு வீட்டுக்குச் செல்கிறார் உதய். மறுநாள் காலையில் பிணத்தை அடக்கம் செய்ய எடுக்க வேண்டும்..துக்க வீட்டில் அசதியில் அனைவரும் தூங்கி விட,ஆனால் இரவு அப்பிணம் காணாமல் போய்விடுகிறது..!.

காணாமல் போன பிணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்குகிறது.காவல்த்துறை ஆய்வாளர் ஆதஷ் பாலா பிணம் காணாமல் போனதைப்பற்றி விசாரணை நடத்துகிறார்…! குடும்ப உறுப்பினர்களிடம் போலீஸார் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், நாயகனின் மற்றொரு மாமனும் இறந்து விடுகிறார். இந்த தொடர் மரணங்களின் மர்மப் பின்னணிக்கும் காணாமல் போன பிணத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா… பிணத்தை கடத்தியது யார் என்பதை  கதையின் கரு என்னவோ சிறிய தீப்பொறி  அதை ஊதி  பெரியதாக்குவதுபோல் படத்தை துப்பறியும் கதையாக்கி டார்க் காமெடி ஸ்டைலில் இந்த படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர்  ஆண்டன் அஜித்…!

நாயகனாக நடித்திருக்கும் உதய் தீப், வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் சுறுசுறுப்பாக வருகிறார். மாமா மகளுடனான காதலில் தீவிரமாக இருந்து கொண்டே மாமாவுக்கு எதிரான மன நிலையில் இருக்கும் அந்த கேரக்டரை இயல்பாக செய்து இருக்கிறார்.மாமன் மகளாக கவிதா சுரேஷ் அழகான இளம் வரவு. நடிப்பிலும் குறை ஒன்றும் இல்லை .போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஆதேஷ் பாலா, பொறுப்பான போலீஸ் அதிகாரியாக கண்முன் நடமாடு கிறார்..!சரண் ராகவன்- விஜே ரகுராம் பின்னணி இசை கதைக்களத்தோடு இணைந்து பயணிக்கிறதுஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாச்சலத்தின் கேமரா காட்சிகளை இயல்பாக்கி விடுகிறது.எழுதி இயக்கியிருக்கும் ஆண்டனி அஜித், பிணக் கடத்தல் சம்பவத்தை வைத்துக் கொண்டு ஒரு போதை பாடமே நடத்தி இருக்கிறார். முடிவு வரை சஸ்பென்ஸ் குறையாமல் படத்தைக் கொண்டு போகும் வித்தையும் இவருக்கு கை வந்து இருக்கிறது.காணாமல் போன பிணத்தை கடத்திப் போனது யார் என்பது தெரிய வரும் இடத்தில் நாயகனின் மாமா குடும்பத்தின் அதிர்ச்சி  ரியாக்சன் நமக்குள்ளும் வந்து போகிறது…!

மொத்தத்தில், போதை கலாச்சாரத்தில் இருந்து இளைஞர்கள் விடுபட விழிப்புணர்வு படத்தை காமெடி கலந்து கொடுத்த சாவீ படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்..!

நம்ம தமிழ் ப்ரைம் நியூஸ் டாட் காம் ரேட்டிங் 2.9/5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *