அங்கம்மாள் திரை விமர்சனம் ரேட்டிங் 4.1/5

அங்கம்மாள் திரை விமர்சனம் ரேட்டிங் 4.1/5

அங்கம்மாள்

நடிப்பு: கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி, முல்லை அரசி, தென்றல் ரகுநாதன்  தயாரிப்பு:  கார்த்திகேயன் எஸ், ப்ரோஸ் ரஹீம், அஞ்சாய் சாமுவேல்

இசை: முகமது  மக்பூல்  மன்சூர்  ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்    கதை: பெருமாள் முருகன்  இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்   பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா

கதை ஓபன் பண்ணா…!

திருநெல்வேலி களக்காடு அருகே ஒரு கிராமத்தில் வாழும்   அங்கம்மாளுக்கு (கீதா கைலாசம்) சுடலை மற்றும் பவளம் ஆகிய இரண்டு பிள்ளைகள். கணவனை இழந்த அங்கம்மாள்  பிடிவாத குணம் கொண்டவள்…! அவள் ஜாக்கெட் அணிவதில்லை. ..!அங்கம்மாளின் மூத்த மகனுக்குத் திருமணமாகி ஏழு வயதில் மகள் இருக்கிறாள்.மனைவி வீட்டோடு இருக்கிறாள்.டிவிஎஸ் 50 யில் வீடு வீடாகச் சென்று பால் வியாபாரம் செய்யும் அங்கம்மாளின் பெரிய மகன் சுடலை விவசாயம் பார்க்கிறார்…மாமியார் என்ற அகந்தையில் மருமகள் சாரதாவை அவ்வப்போது அடித்து அடக்கி வைத்திருக்கிறார் அங்கம்மாள். இரண்டாவது மகனை நன்றாக படிக்கச் வைத்து டாக்டர் ஆக்கி விடுகிறாள்…எதற்கும் அஞ்சாத குணம் .. அதனால் அவளுக்கு எதிர் பேச்சு பேச ஊர்க்காரர்கள் பயப்படுவார்கள். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கிற மாதிரிஎதையும் முகத்துக்கு நேரே கேட்டு விடுவதால் அவளைக் கண்டால் அனைவருக்கும் பயம்.

இவ்வாறிருக்க டாக்டர் பவளம் ஒரு பணக்கார குடும்பத்துப் பெண்ணான ஜாஸ்மினை காதலிக்கிறார். மாற்று மதமானாலும் மாப்பிள்ளை டாக்டர் என்பதால் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள் ஜாஸ்மினின் பெற்றோர்கள். மாப்பிள்ளையின் குடும்பத்தார்களைப் பார்க்க பெண் வீட்டார் கிராமத்துக்கு வரும்போது தனது அம்மா அங்கம்மாள் மேல் சட்டையில்லாமல் இல்லாமல் மாராப்போடு இருந்தால், பெண் வீட்டார்கள் பழைய பஞ்சாங்கத்து குடும்பம் என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காக தனது அண்ணி சாராதாவிடம் அம்மாவை ரவிக்கை போட சொல்லச் சொல்கிறார் பவளம். அதற்கு மறுக்கிறாள் மாமியார் அங்கம்மாள். பவளமே நேரடியாக அம்மாவிடம் வந்து பெண்வீட்டார்கள் வரும்போது ரவிக்கைச் சட்டை போட்டுக்கொள்ள அம்மாவிடம் கோபப்படாமல் கெஞ்சுகிறார். அப்போது சரியென்று சொன்ன அங்கம்மாள் .. ஜாக்கெட் போட்டுக் கொள்கிறாள். ஆனாலும் அதை ஊர் வேறு விதமாகப் பார்க்க, அவள் கேலியாக உணர்ந்து மனம் மாறுகிறாள்.வாங்கிவைத்திருந்த சட்டைத்துணியை தீயில் எரித்துவிடுகிறார் அங்கம்மாள். மகனுக்காக மறுபடியும் ஜாக்கெட் விஷயத்தில் அவள் மனம் மாறினாளா? பெண் வீட்டார்கள் முன் அங்கம்மாள் மேல் சட்டை அணிந்திருந்தாளா? இல்லையா? சட்டை அணிய முதலில் சம்மதம் தெரிவித்த அங்கம்மாள் பிறகு ஏன் மறுத்தாள் ..?. என்பதுதான் கதை.

கீதா கைலாசம் அங்கம்மாவாக அற்புதமாக நடித்திருக்கிறார் .இயல்பான நடிப்பு தன் கணவன் இறந்த பிறகு 30 வருடங்களாக பிறகும் போராடி, உழைத்து, இரண்டு மகன்களை காப்பாற்றி ,அந்த ஊருக்குள்ளே ஒரு கெத்தாக வரும் அங்கம்மா ,வீரத்தில் மங்கம்மா வாகவும் தெரிகிறார்.‘உச்சிமலை காத்து உச்சாணிப்பூ ‘கதையை தனது பேத்தியிடம் அங்கம்மாள் கூறுவது போல படம் தொடங்குகிறது. அங்கம்மாள் பாத்திரத்திற்கு கீதா கைலாசம் பொருத் தமான தேர்வாக இருக்கிறார். எப்போதும் வாயில் சுருட்டுடன் புகைபிடித்தபடி இருக்கிறார். மகன்கள் மருமகளிடம் சிடுசிடுத்தாலும் பேத்தியிடம் பாசத்தைப் பொழிகிறார்…யார் எது கேட்டாலும்  பதிலுக்கு கெட்ட வார்த்தை போட்டு பேசி அதிர வைக்கும் அந்த அங்கம்மாள் அவ்வப்போது அரங்கையும் அதிர்ச்சியில் அதிர வைக்கிறாள்….!

நாடோடிகள் புகழ் பரணி,..இவர் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டே இருப்பது அம்மாவிடம் அமைதியாக இருப்பது, மனைவியிடம் அமைதியாக இருப்பது, கிளைமாக்ஸ் காட்சியில்பொங்கி எழுந்து ,ஒரே சிங்கிள் ஷாட்டில் அற்புதமாக நடித்திருக்கிறார். அவர் கதாபாத்திரம் பேசப்படும் கதாபாத்திரம்…தென்றல் ரகுநாதன்மருமகள் ஆக வந்து இயல்பான கிராமத்து மருமகளாக சிறப்பாக செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் கட்சியில் மாமியாரிடம் பொங்கிஎழும் காட்சி சிறப்பாக இருக்கிறது…!

விபின் ராதாகிருஷ்ணன்,..திரை கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் …ஒரு வித்தியாசமான கதையை பெருமாள் முருகனிடம் “கோடி துணி” நாவலை வாங்கி அதை திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் வாழும் அங்கம்மாளின் கதையை சொல்லும் இயக்குனர் அந்த மாவட்ட இயல்பு மாறாத பேச்சு வழக்கோடு அவர்களை நடிக்க வைத்து பாராட்டும் வாங்கி இருக்கிறார்…!

கதையின் மூலக்கதை கோடி துணி யாக இருந்தாலும் திரைக்கதை வடிவில்   அங்கம்மாள் அவார்டு வாங்குவது நிச்சயம் அங்கம்மாள் படக்குழுவினர் இயக்குனர் அனைவருக்கும் தமிழ் பிரைம் நியூஸ் டாட் காம் சார்பாக வாழ்த்துக்கள் …!

நம்ம தமிழ் பிரைம் நியூஸ் டாட் காம் ரேட்டிங் 4.1/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *