“BP 180” திரை விமர்சனம் ரேட்டிங் 3.9/5
B P 180
நடிப்பு: டேனியல் பாலாஜி, அருள் தாஸ், தான்யா ரவிச்சந்திரன், தமிழ் தயாரிப்பு: பிரதிக் டி சாட்பார், அதுல் எம் போஸமியா,
இசை: ஜிப்ரான் ஒளிப்பதிவு: ராமலிங்கம் இயக்கம்: ஜெ பி பிஆர்ஓ:சுரேஷ் சந்திரா, (D’One), அப்துல் ஏ நாசர்

கதை ஓபன் பண்ணா…!
வடசென்னை காசிமேடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நேர்மையான மருத்துவர் நாயகி தன்யா ரவிச்சந்திரன்…காசிமேடு அர்னால்டு (டேனியல் பாலாஜி) அந்தப் பகுதி தாதாவாக உலா வருகிறார். என்னதான் ரவுடியாக இருந்தாலும் மூத்தவர் பாக்யராஜிடம் தனி மரியாதை வைத்திருக்கிறார். ஒரு விபத்தில் பாக்யராஜ் மகள் இறந்து விடுகிறார். மகள் உடலை எந்தவித பிரேத பரிசோதனையும் செய்யாமல் தன்னிடம் தரும்படி டாக்டரிடம் வேண்டுகிறார் பாக்யராஜ் ..விபத்தில் இறந்த அந்த பெண்ணின் உடற்கூறாய்வில் வயிற்றில் மூன்று மாத கரு இருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்தப் பெண் திருமணமாகாதவள் என்பதால் கரு பற்றி ரகசியம் காக்கும் படி போன் வடிவில் ஏகப்பட்ட பிரஷர். அதில் ஏகப்பட்ட மிரட்டல்களும் அடங்கும். எந்த மிரட்டலுக்கும் பணியாததால் ஒரு கட்டத்தில் அவரை தீர்த்து கட்டவும் துணிகிறார்கள்…!

விபத்தில் இறந்து போனது ரவுடி டேனியல் பாலாஜியின் உறவுக்கார பெண் என்பதால் அவரும் தன் பங்குக்கு நாயகியை மிரட்டுகிறார். நாயகியோ கொஞ்சமும் பயப்படாமல் ‘நீ சரியான ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாடா’ என்கிறார்….இந்த சவாலை ஏற்று கொலை பாதகத்துக்கு கொஞ்சமும் அஞ்சாத டேனியல் பாலாஜி வந்தாரா? அதன் பின் என்னென்ன நடந்தது என்பது நெஞ்சை பதற வைக்கும் கிளைமாக்ஸ்.
படத்தின் முதல் பாதியில் காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. இடைவேளைக்கு முன் கதாநாயகி தன்யா பேசும் வசனம் புதுமையாகவும், ரசிக்கும்படியும் உள்ளது. மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசிபடம் இதுதான். வில்லத்தனத்தின் உச்சத்தைக் காட்டி நடித்துள்ளார். தன்யா ரவிச்சந்திரன் ஒரு நேர்மையான மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது நடிப்பின் மூலம் மருத்துவர்களுக்கு முன் உதாரணமாக நடித்துக் காட்டியுள்ளார். அமைதியான ஆக்ரோஷத்தை முகத்தில் காட்டியது அருமை.

அருள்தாஸ், தமிழ் ஆகியோரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். இரண்டாம் பாதியில் டேனியல் பாலாஜியை கடத்த போடும் திட்டமும் நன்றாக இருந்தது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு தேவையான பதற்றத்தை கூட்டுகிறது. ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும், இளையராஜா சேகரின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. இயக்குனர் ஜெ.பி.ஒரு பழிவாங்கும் கதையை வித்தியாசமான முறையில் கொடுக்க முயற்சி செய்து, அதில் வெற்றி பெற்றுள்ளார். உச்சக்கட்ட காட்சியின் முடிவை வித்தியாசமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஜெ.பி.

இந்த உலகத்துல நேர் நேர்மையா இருக்கவே முடியாதா இதற்கு ஒரு முடிவே இல்லையா படம் பார்க்கும் நமக்கும் படபடப்பை அதிகரிக்கும் திரைக்கதை நகர்வுகள் யாரும் எதிர்பார்க்காத முடிவை தந்து அசத்தியுள்ளார் இயக்குனர்…! high BP 180 படம் பார்க்கும் எல்லோருக்கும் வந்து போகிறது… அந்த வகையில் இயக்குனர் மற்றும் பட குழுவிற்கு வாழ்த்துக்கள் இதுபோல சிறந்த படைப்புகள் வரவேற்கப்பட வேண்டும்
நம்ம தமிழ் ப்ரைம் நியூஸ் டாட் காம் ரேட்டிங் 3.9/5

