ஒண்டி முனியும் நல்லபாடனும் திரை விமர்சனம் ரேட்டிங் 4.1/5

ஒண்டி முனியும் நல்லபாடனும் திரை விமர்சனம் ரேட்டிங் 4.1/5

படம்: ஒண்டி முனியும் நல்லபாடனும்

நடிப்பு: பரோட்டா முருகேசன், கார்த்திகேசன், சித்ரா, முருகன், சேதுபதி, விஜயன், விகடன்   தயாரிப்பு:கே கருப்புசாமி   இசை: என் டி ஆர்  ஒளிப்பதிவு: விமல்

இயக்கம்: சுகவனம்  பிஆர்ஓ: நிகில் முருகன்

கதை ஓபன் பண்ணா….!

கோயம்புத்தூரை ஒட்டியுள்ள ஒரு அழகான கிராமத்தில் விஜயன் சிறுவனாக இருக்கும்போது கிணற்றில் தவறி விடுந்துவிடுகிறான். அவன் உயிர் பிழைக்க வேண்டி தான் வளர்த்துவரும் ஒரு கிடா குட்டியை ஒண்டிமுனி சாமிக்கு நேர்ச்சையாக்குகிறார்அப்பா நல்ல மாடன் .. அதன்படியே மகன் பிழைத்து விட, கிடா குட்டியை  வளர்த்து வருகிறார்.  . இப்போது அந்த கிடாவை ஒண்டிமுனி சாமிக்கு வெட்டி படையலாக்க வேண்டும். மகனும் கிடாவும் வளர்ந்து நிற்க ஒண்டிமுனிக்கு அதை காணிக்கையாக்கும் வேளை மட்டும் வரவே இல்லை.

அதற்குக் காரணம் அந்த ஊரில் பகைமை பாராட்டித் தெரியும் இரண்டு பன்னாடிகள். ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருப்பதால் இருவரும் ஒன்றுபட்டு கோயில் நிகழ்வுக்கு வராமல் இருக்க இரண்டு பேர் வீட்டுக்கும் நடையாய் நடக்கிறார் முருகேசன். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரான அவரை சகல உதவிகளுக்கும் பைசா செலவில்லாமல் பயன்படுத்திக் கொண்டு ஆனால் அவரது கிடா காணிக்கையை மட்டும் செலுத்த முடியாமல் செய்து வருகிறார்கள் இரண்டு பன்னாடிகள்…!ஒரு கட்டத்தில் பெரிய பன்னாடி ஒத்துக்கொள்ள அதற்கு பின்னால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு எதிராக ஒரு பெரிய சதி இருக்கிறது.

ஒண்டிமுனி என்பது சாமி. நல்லமாடன் என்பது அந்த கிராமத்தில் ஒடு க்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த நபர்.வெண்ணிலா கபடி குழு படத்தில் சூரிக்கு பரோட்டா போட்டி வைப்பாரே அந்த சர்வர்தான் பரோட்டா முருகேசன். அவரின் அப்பாவியான தோற்றம் கதைக்கு நன்றாக துணை சேர்த்துள்ளது. கிராமத்தானின் வாழ்க்கை தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக காலில் மிதியடிகூட இல்லாமல் ஓடுவதிலும், ஏமாற்றத்தில் முகம் வாடுவதிலும் சந்தோஷ்த்தில் புன்னகையோடு முகம் பிரகாசிப்பதிலும் பரோட்டா முருகேசன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி அபாரமாக நடித்துள்ளார். தேசிய விருதுக்கு தகுந்த நடிப்பை கொடுத்து உழைத்திருக்கிறார்.

இவருக்கு மகளாக நடித்திருக்கும் சித்ரா நடராஜனின் நடிப்பு கைத்தட்ட வைக்கிறது. தம்பி விஜயனுக்காக அவனின் காதலிக்கும், தந்தை பரோட்டா முருகேசனுக்கும் அறியுரைகூறும் காட்சிகள் அலாதியானது. கொங்கு தமிழ் அவரின் நாக்கில் நடனமாடுகிறது. ஒரு பவுன் தங்கநகைக்காக மனைவி சித்ராவை பிறந்த வீட்டுக்கு அனுப்பிய கணவன், மனைவியை பார்க்க வரும்போது அவனது விருப்பத்தை புரிந்துகொண்டு கணவனுக்கு இடம்கொடுக்கும் பெண்மையின் தன்மையை திரையில் காட்டியிருக்கும் சித்ரா நடராஜன் கிராமத்துப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். திரைவானில் அவருக்கொன்று ஒரு இடமிருக்கிறது. வாழ்த்துக்கள். சாராயத்துக்கு தொட்டுக்கொள்ள கோழி திருடும் விஜயன் காதலியின் ஆசைக்கு மோட்டார் சைக்கிள் வாங்க ஆட்டை விற்கும்போதும், பிறகு தந்தைக்காக அடங்கி நடக்கும் நல்லபிள்ளையாக நடிக்கும் காட்சியிலும் தனது தனித்துவத்தை  காட்டியிருக்கிறார்.  

படத்தின் நகைச்சுவைக்கு பண்ணையாரும் மாப்பிள்ளை கதாபாத்திரமும் துணை நிற்கின்றன. கிராமத்தின் அழகை படபிடித்த ஒளிப்பதிவாள்ர் தன் திறமை முழுவதையும் கொட்டியிருக்கிறார். படம் பார்ப்பவர்கள் கிராமத்துக்குள்ளேயே இருப்பதுபோல் உணரமுடிகிறது பாராட்டுதலுக்குறியது. மொத்தத்தில் இந்த படம் தேசிய விருதுக்கு தகுதியானது..ஒண்டி முனியும் நல்ல பாடனும் –  இப்படம் பல விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது அதற்காக இயக்குனர் சுகவனத்தை பாராட்டலாம் ..மேலும் இப்படத்திற்காக உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ….!

நம்ம தமிழ் பிரைம் நியூஸ் டாட் காம் ரேட்டிங் 4.1/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *