தீயவர் குலை நடுங்க திரை விமர்சனம் ரேட்டிங் 3.4/5

தீயவர் குலை நடுங்க திரை விமர்சனம் ரேட்டிங் 3.4/5

தீயவர் குலை நடுங்க

நடிப்பு: அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம்,   பிரவீன் ராஜா ,   லோகு Nkps, ,ராம்குமார்  தங்கதுரை, பேபி அனிகா,  பிராங்க்ஸ்டர் ராகுல்  பிரியதர்ஷினி, சையத்  ஜிகே. ரெட்டி     பி எல். தேனப்பன், ஓ ஏ கே. சுந்தர்,  வேலா ராமமூர்த்தி, பத்மன்   தயாரிப்பு: ஜி. அருள்குமார்   இசை: பரத் ஆசிவகன்   ஒளிப்பதிவு: சரவணன் அபிமன்யு    கதை & இயக்கம்: தினேஷ் இ லெட்சுமணன்    பிஆர்ஓ: யுவராஜ்

கதை ஓபன் பண்ணா…!

எழுத்தாளர் ஜெபநேசனை குறி வைத்து கொலை செய்கின்ற ஒரு சைக்கோ..அதை துப்பறியும் பொறுப்பை இன்ஸ்பெக்டர் மகுடபதி (அர்ஜுன்) ஏற்கிறார்.? என்பதை விரிவான ஒரு திரைக்கதையால் காட்சிப்படுத்துகிறது இப்படம்.   கொடூரக் குற்றவாளியான சைக்கோ, அடுத்து ஈகிள் டவர் ஓனர் வரதராஜனை கொல்கிறான் ஏன்? அர்ஜுன் கண்டடைகிறாரா? அடுத்து ஈகிள் டவர் வாட்ச்மேன் ,  லாண்டரி மேன் இருவரும் கொல்லப்படுகிறார்கள். அவர்களை ஏன் கொலை செய்ய வேண்டும் என்ன நடந்தது ? தீவிர விசாரணையில் எதிர்பார்க்காத  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. அதை நூல் பிடித்து செல்லும்போது ஒரு சிறுமியின் பரிதாப கொலையும் உடன் சேர்கிறது. ஒரு பக்கம் மகுடபதி விசாரணை தொடர இன்னொரு பக்கம் கொலைகளும் தொடர்கிறது.

அர்ஜுன் காக்கி வேட்டைக்காரராக வருகிறார். அதிகமாக யூனிஃபார்ம்  அணியாவிட்டாலும்  அதே கறார், கண்டிப்பு காட்டி தனது வேடத்தை தக்க வைக்கிறார்.
தொடக்க காட்சி விசாரணையில் கழுகு பில்டிங், விளம்பர பலகை என்று எதையெதையோ தொடர்புபடுத்தி பேசி ஒரு வழியாக அவர் சிறுமி கொலை சம்பத்துக்கு வந்து சேரும்போது  இந்த விசாரணை ஒரு கட்டத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷி டம் வந்து நிற்கிறது.இந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் ஆசிரியை. திருமணமாகாத இவர் திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிக்கிறார். அவரைப் பற்றி முழுசாக தெரிந்து கொள்ள பழகத் தொடங்குகிறார்.

இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரி அர்ஜூன் மேற்கொண்ட விசாரணையில் கொடூர கொலைக்கும், ஐஸ்வர்யா ராஜேஷின் வருங்கால கணவராக கருதப்படும் பிரவீன் ராஜா வசிக்கும் அடிக்குமாடி குடியிருப்புக்கும்   தொடர்பு இருப்பதை கண்டு பிடிக்கிறார்.   அது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தும் போது, மேலும் ஒருவர் அதே நபரால் கொல்லப் படுகிறார். யார் அந்த மர்ம நபர் ? கொலைகளுக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கும் உள்ள சம்பந்தம் என்ன? ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த கொலை பின்னணியில் தொடர்பு உண்டா?, கேள்விகளுக்கான விடை பரபர கிளைமாக்ஸ்.

முதல் பாதியில் ஜாலியான ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகவும் , இரண்டாம் பாதியில் மனித நேயம் உள்ள ஒரு பள்ளி ஆசிரியராக அற்புதமாக நடித்திருக்கிறார்.மீரா கதாபாத்திரத்தில் அழகாகப் பங்களித்திருக்கிறார். மீராவின் மனிதநேயம் குழந்தை அணிகாமீது காட்டும் பாசம், என அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் முத்திரை பதித்திருக்கிறார் பாராட்டுத்தக்க நடிப்பு கிளைமாக்ஸ் காட்சியில் அவர் பேசும் வசனம் “பெண் என்றால் உன் அம்மா, அக்கா தங்கை அண்ணி என எல்லோரும் பெண் தானே” என்று சொல்லும் பொழுது பலத்த கைதட்டல்..!ஆட்டிசம் பாதித்த சிறுமியாக அனிகா இயல்பான நடிப்பில் நிஜமாகவே ஆச்சரியப்படுத்துகிறார். உடல் அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் தனது உணர்வுகளை வெளிப்படுத்த முயன்று, முடியாமல் போகும் இடத்தில் அந்தப் பரிதாப பார்வை இதயத்தை துளைத்து விடுகிறது…!

ராம்குமார் பில்டர் வரதராஜன் இந்த கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருக்கிறார் .   அர்ஜுன் இடம் மோதும் காட்சி கம்பீரம்.  வேலா ராம மூர்த்தி மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.   தற்காப்பு கலை சொல்லித்தரும் மாஸ்டராக வந்து கிளைமாக்ஸ் காட்சியில் சண்டையில் அதகளம் பண்ணுகிறார்…தன் மகள் அபிராமி தன்னோடு பேசவில்லை என்று அவர் ஆதங்கப்பட்டு பேசும் காட்சிகள் அவர் மீது பரிதாபம் ஏற்படுத்துகிறது. அபிராமி கீதா என்ற கதாபாத்திரத்தில்  காவேரி என்ற குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் அனுதாபங்களை அள்ளிக் கொள்கிறார் .தன் காதலை ஏற்றுக் கொள்ளாத வேலராம மூர்த்தியிடம், கடைசி வரை வீம்பாக இருந்து கண்ணீர் சிந்தும் அருமையான நடிப்பு.

முடிவில் குற்றவாளி சிக்கியது போன்ற உணர்வைத் தந்து இன்னொரு குற்றவாளி இருக்கிறார் ,என்று எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறார்இயக்குனர்…அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் பூர்த்தி செய்கிறது, இரண்டாம் பாதி. பிற்பகுதியில் நிகழும் ஒரு ட்விஸ்ட் திரைக்கதையின் ஒட்டத்துடன் இயல்பாகப் பொருந்தியிருக்கிறது. இந்த எதிர்பாராத திருப்பம் படத்தின் மையக் கதாபாத்திரங்களுக்கு அளிக்கும் அதிர்ச்சி, பார்வையாளர்களுக்கும் ஏற்படுவது,  திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி…எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் லக்‌ஷ்மணன், உண்மை சம்பவம் ஒன்றை நெஞ்சம் நெகிழும் விதத்தில் சொல்லி இருக்கிறார்.

மொத்தத்தில், ‘தீயவர் குலை நடுங்க’ மிரட்டலான சஸ்பென்ஸ் திரில்லர்

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *